twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாசத்துக்குரிய பாரதிராஜாவின் கைவண்ணத்தில் தேசிய விருதுகளை ஏந்திய படங்கள்!

    |

    Recommended Video

    நீயெல்லாம் ஹீரோவா- பார்த்திபனை பார்த்து கேட்ட பாரதிராஜா | Bharathiraja | OththaSeruppu

    சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் கை வண்ணத்தில் உருவான 6 படங்கள் தேசிய விருதுகளை தட்டியிருக்கின்றன.

    இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது முதல் படமான பதினாறு வயதினிலே திரைக்கு வந்த ஜூலை 17ஆம் தேதியை அவருக்கு நெருக்கமானவர்களும் அவரது ரசிகர்களும் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர்.

    இதனால் ஆண்டுக்கு இரண்டு முறை பிறந்தநாளை பார்க்கிறார் பாரதிராஜா. பாரதிராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மட்டுமின்றி அவரால் இன்று சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

    முதல் தேசியவிருது

    முதல் தேசியவிருது

    பாரதிராஜா என்றும் நின்று பேசும் பல படங்களை படைப்புகளாக படைத்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு முதன் முதலில் தேசிய விருதுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது தெலுங்கில் அவர் இயக்கிய சீதைக்கொக சிலுக்கா என்ற படம் தான். இந்த படம் 1982ஆம் ஆண்டு சிறந்த வட்டார மொழி படத்திற்கான விருதை பெற்றது.

    முதல் மரியாதை

    முதல் மரியாதை

    அதனை தொடர்ந்து எந்த வயதிலும் காதல் வரலாம் என்று அழுத்தம் திருத்தமாக பாரதிராஜா கூறிய முதல் மரியாதை படம் 2 தேசிய விருதுகளை பெற்றது. 1986 ஆம் ஆண்டு சிறந்த வட்டாரத் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இந்தப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுக்காகவும் கவிஞர் வைரமுத்து சிறற்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார்.

    வேதம் புதிது

    வேதம் புதிது

    இதையடுத்து 1987 ஆம் ஆண்டு வெளிவந்த வேதம் புதிது திரைப்படம் பிற சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இந்தப் படத்தில் சத்யராஜ், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    கருத்தம்மா

    கருத்தம்மா

    பின்னர் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த கருத்தம்மா திரைப்படம் குடும்ப நலன் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருதை 1995 ஆம் ஆண்டு பெற்றது. இத்திரைப்படத்தில் ராஜா, மகேஷ்வரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற போறாளே பொன்னுத்தாயி பாடலுக்காக சிறந்த பின்னணிப்பாடகிக்கான தேசிய விருதை பெற்றார் சுவர்ணலதா. அதே பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை கவிஞர் வைரமுத்து பெற்றார்.

    அந்திமந்தாரை

    அந்திமந்தாரை

    1996ஆம் ஆண்டு ஜெயசுதா, விஜயகுமார், சங்கவி ஆகியோரின் நடிப்பில் பாரதிராஜா இயக்கதில் வெளிவந்த அந்திமந்தாரை படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

    கடல் பூக்கள்

    கடல் பூக்கள்

    கடைசியாக 2001ஆம் ஆண்டு வெளிவந்த கடல் பூக்கள் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

    English summary
    Six movies of Director Bharathiraja has got National film awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X