மகேஷ் பாபுவிற்கு அம்மாவாக நடிக்க தேவயானி வீட்டில் விழுந்து எழுந்து கதை சொன்ன எஸ்.ஜே.சூர்யா

சென்னை: மொழி, அபியும் நானும் போன்ற தரமான படங்களை இயக்கியிருக்கும் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் பொம்மை.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் தேவயானி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் நியூ படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கின்றனர்.

நியூ

நியூ

வாலி, குஷி போன்ற திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் மற்றும் ஜோதிகாவை வைத்து நியூ என்கிற படத்தை துவங்கினார் எஸ்.ஜே.சூர்யா. அதற்காக ஃபோட்டோ ஷூட் எல்லாம் நடைபெற்றது. முதலில் கதையை கேட்காமலேயே ஒப்பந்தமான இருவரும் பின்னர் கதையை கேட்டுவிட்டு அடல்ட் காமெடி அதிகமாக இருக்கிறது என்று விலகிவிட்டனர். அதன் பிறகு தானே கதாநாயகனாக அதில் நடிக்கலாம் என்று முடிவெடுத்தார் எஸ்.ஜே.சூர்யா. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் துவங்கினார்.

நானி

நானி

ஏற்கனவே குஷி திரைப்படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து இயக்கி மிகப் பெரிய வெற்றி கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து நியூ படத்தின் தெலுங்கு பதிப்பான நானி படத்தில் மகேஷ்பாபு மற்றும் அமித்ஷா பட்டேல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். மகேஷ் பாபுவின் அம்மா கதாபாத்திரத்திற்காக தேவயானியை அணுகியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா அந்தச் சமயத்தில் திருமணமாகி இருந்தாலும் கூட சில படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார் தேவயானி.

அம்மா கதாபாத்திரமா...

அம்மா கதாபாத்திரமா...

அம்மா கதாபாத்திரம் என்றதும் நான் நடிக்க மாட்டேன், கதையே கேட்க மாட்டேன் என்று கூறினாராம். பின்னர் விடாப்பிடியாக அவருடைய வீட்டிற்கு சென்று முழு கதையையும் விவரித்துள்ளார். உங்களுக்கும் கதாநாயகிக்கும் ஒரே வயதுதான் என்று கதையை கூற ஆரம்பித்த எஸ்.ஜே.சூர்யா விழுந்து, எழுந்து, நடித்துக் காண்பித்து கதையை சொன்னாராம். பிறகுதான் மகேஷ் பாபுவிற்கு அம்மாவாக நடிக்க சம்மதித்தாராம் தேவயானி. குறிப்பாக தனது குழந்தையை பற்றி பேசும்பொழுது, நான் சோறு ஊட்டி விடுவேன் அவன் சோறுடன் சேர்ந்து எனது விரல்களையும் சாப்பிடுவான் என்ற வசனம் தேவயானிக்கு மிகவும் பிடித்திருந்ததாம்.

தமிழிலும் அம்மா

தமிழிலும் அம்மா

முதலில் தெலுங்கு பதிப்பில் ஒப்பந்தமான தேவயானி பின்னர் தமிழ்ப் பதிப்பிலும் தனக்கு அம்மாவாக நடிக்க வைத்திருப்பார். தமிழில் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்த நியூ திரைப்படம் தெலுங்கில் தோல்வியை சந்தித்தது. நியூ வெற்றிக்கு முக்கிய காரணமாக ஏ.ஆர்.ரகுமானின் இசையும், படத்தின் இளமையான திரைக்கதையும், எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிம்ரனின் நடிப்பும் அமைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X