»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருடா திருடியில் வண்டார்குழலி.. வண்டார்குழலி.. பாடலுக்கு டப்பாங்குத்து டான்ஸ் போட்டதன் மூலம்புகழ்பெற்ற ஸ்மிதாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

ஆள் என்னவோ ஐந்தடிக்கும் குறைவு தான். ஆனால், தழுக் மொழுக் உடற் கட்டும், சில்க் ஸ்மிதாவை நினைவுபடுத்தும் முகமும் இருப்பதால் இவரைத் தேடிவரும்சான்ஸ்களுக்கு குறைவே இல்லை.

சேனா படத்தில் ஜூனியர் சில்க்குடன் சேர்ந்து சத்யராஜூடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் போட்ட இவரைஎல்லோரும் மறந்துவிட, திருடா திருடியில் போட்ட ஆட்டத்தால் மார்க்கெட் சூடு பிடித்துவிட்டது. மும்தாஜ்,கும்தாஜ், லேகாஸ்ரீ, ஜூனியர் சில்க் ஆகியோருக்குப் போக வேண்டிய சான்கள் எல்லாம் இப்போது ஸ்மிதாவைநோக்கியே.

வெறுமனே டான்ஸ் மட்டும் ஆடக் கூப்பிட்டவர்களிடம் கெஞ்சி, கொஞ்சி சில கேரக்டர் ரோல்களையும்வாங்கிவிடுகிறார் ஸ்மிதா.

ஒருமுறை சொல்லிவிடு என்ற படத்தில் கதாநாயகனுக்கு முறைப் பெண்ணாக நடிக்கிறார். கதாநாயகனையும்,கதாநாயகியையும் சேர்த்து வைக்கும் கேரக்டரைச் செய்தாலும் படத்தில் இவருக்குத் தரப்பட்டுள்ள முக்கியமானரோல் கும்மாங்குத்து டான்ஸ் தான்.

இது தவிர மேலும் 3 படங்களில் ஒரு பாட்டுக்கு டான்சுடன் கூடிய சிறிய ரோல்களிலும் நடித்து வருகிறார்.

அத்தோடு ஊர்களில் திருவிழா, கலை நிகழ்ச்சி என்று கூப்பிட்டாலும் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு, போய்ஆட்டம் போட்டுவிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு மேடையில் ஆடும்போடு சேலை அவிழ்ந்து, உள்ளாடைகள்எல்லாம் வெளியே தெரிய மிகவும் கஷ்டப்பட்டு மானத்தைக் காத்துக் கொண்டு தப்பி வந்துள்ளார் இந்த ஸ்மிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil