»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil
"திருடா திருடியில் வண்டார் குழலியாக வந்து வாலிபப் பசங்களின் ராவுகளை நோகடித்த ஸ்மிதா, மீண்டும் ஒரு கெட்டகுத்தாட்டம் போட்டுள்ளார்.

கோலிவுட்டில் இது குத்தாட்ட சீசன்போலும். "வசூல் ராஜாவில் ரகஸ்யா போட்ட ஆட்டம் இன்னும் பலரது கண்களை விட்டுஅகலவில்லை. இந்த ஒரே பாட்டிற்குப் பிறகு இவரது காட்டில் அடை மழை கொட்டோ கொட்டு என கொட்டுவது வேறு விஷயம்.

இந்த இத்யாதி காரணங்களால் இப்போது படத்தில் ஒரு குத்தாட்டமாவது இருந்தால்தான் அதை படமாகவேஅங்கீகரிக்கிறார்களாம் வினியோகஸ்தர்கள். எனவே ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக ஏகப்பட்ட குத்தாட்டங்கள்திணிக்கப்பட்டு வருகின்றன.

அதிலும், புதுசாக இதற்குப் பாடலை எழுதுவதை விட அந்தக் காலத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பல பாடல்களை குத்தாட்டப்பாடல்களாக உருமாற்றி, ரீ மிக்ஸ் செய்து, மால்குடி சுபா, மாலதி என ஹஸ்கி வாய்ஸ் பாடகிகளை வைத்து பாட வைத்துரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்கள் நம்ம இயக்குனர்கள்.

அந்த வரிசையில், இப்போது விவேக் ஹீரோவாக நடிக்கும் "சொல்லி அடிப்பேன் (என்னைக்குத் தான் படத்தை முடிச்சு, ரிலீஸ்செய்வாங்களோ!) படத்தில் ஒரு குத்து பாட்டு வருகிறது.

அந்தக் காலத்தில் பிரபலமான "சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு.. பாடலை ரீ மிக்ஸ் செய்து குத்துப்பாட்டாக்கியுள்ளார்கள். இந்தப் பாட்டுக்குத்தான் வண்டார்குழலி ஸ்மிதா ஆடியுள்ளாராம்.

இந்தப் பாட்டில் பார்ட்டி, படு மோசமாக ஆடிக் கலக்கியுள்ளதாம். பாட்டில் வருவதைப் போலவே சித்தாடையுடன் தான் ஸ்மிதாதுள்ளிக் குதித்து ஆடியுள்ளாராம்.

ஏற்கனவே தேஜாஸ்ரீயும், சாயாசிங்கும் தலா ஒரு குத்துப் பாட்டுக்கு இந்தப் படத்தில் ஆடியுள்ளார்கள். இவர்கள் போதாதென்றுஸ்மிதாவையும் கூட்டி வந்து கூத்தடித்திருக்கிறார்களாம்.

எப்படியோ தமிழ் ரசிகக் கண்மணிகளை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

Read more about: tamil heroes, trisha, wanted heroine
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil