»   »  சிக்கிய சந்தியா-உதவிய ஸ்னேகா!

சிக்கிய சந்தியா-உதவிய ஸ்னேகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயா டிவியின் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நள்ளிரவில் வீடுதிரும்ப முயன்ற நடிகை சந்தியாவின் கார் சகதியில் சிக்கிக் கொண்டது. அவருக்குஉதவுவதற்காக ஸ்னேகா சாலையில் இறங்கி கை கொடுத்தபோது அங்கே பெரும்கூட்டம் கூடி விட்டது.

அதிர்ஷ்டவசமாக இரு நடிகைகளையும் ஒன்றும் செய்யாமல் உதவிக் கரம் நீட்டிஅசத்தினர் அந்த வெள்ளந்தி கிராமத்தினர்.

ஜெயா டிவி சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு விஜிபி கோல்டன் பீச்சில் புத்தாண்டுநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஸ்னேகா, சந்தியா, பசுபதிஉள்ளிட்டோருக்கு விருதுகள் கொடுக்கப்பட்டன.

நள்ளிரவில் நிகழ்ச்சி முடிந்ததும் சந்தியாவும், ஸ்னேகாவும் கிளம்பினர்.மேடையிலிருந்து அவர்கள் இறங்கியபோது இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துதெரிவிக்க, கை குலுக்க பெரும் கூட்டம் கூடி விட்டது.

அடித்துப் பிடித்து வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் கை கொடுக்கமுண்டியடித்தனர். இதனால் கூட்டத்தில் சிக்கி கசங்கினர் ஸ்னேகாவும், சந்தியாவும்.பின்னர் ஒரு வழியாக மீண்டும் இருவரும் கார்களில் ஏறி வீடுகளுக்குக் கிளம்பினர்.

அப்போது ஸ்னேகாவின் காருக்குப் பின்னால் சந்தியாவின் கார் வந்தபோதுஎதிர்பாராத விதமாக சாலையின் ஓரம் இருந்த சகதியில் சிக்கிக் கொண்டது. டிரைவர்எவ்வளவோ முயன்றும் காரை எடுக்க முடியவில்லை.

சந்தியாவின் கார் சிக்கிக் கொண்டதைப் பார்த்த ஸ்னேகா தனது காரை நிறுத்தச்சொல்லி விட்டு காரிலிருந்து இறங்கி சந்தியாவின் காரை நோக்கி வந்தார். அவரைப்பார்த்ததும் சந்தியாவும், அவரது தாயாரும் காரிலிருந்து இறங்கினர்.

இரு நடிகைகளும் நள்ளிரவில் நடுச் சாலையில் நடந்து வந்ததைப் பார்த்ததும்அருகாமையில் உள்ள கிராமத்தினரும், புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் போய்வந்து கொண்டிருந்தவர்களும் அங்கு திரண்டனர்.

இதனால் ஸ்னேகாவும், சந்தியாவும் பயந்து போயினர். என்னாகப் போகிறதோ என்றுஇருவரும் பயந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக,சந்தியாவின் காரை பத்திரமாக எடுக்க கிராமத்தினர் உதவினர். கடப்பாரைகள்,மண்வெட்டியை எடுத்து வந்து சகதியை அகற்றி காரை வெளியே கொண்டு வரஉதவினர்.

இந்தப் பணி முடியும் வரை இரு நடிகைகளுக்கும் பாதுகாப்பாக கிராமத்தினர் சிலர்சுற்றி நின்று உதவினர். ஒரு வழியாக கார் சரியாக, இருவரும் அனைவருக்கும் நன்றிசொல்லி விட்டு கிளம்பிச் சென்றனர்.

சந்தியா இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், நானும், அம்மாவும் பயத்தில் உறைந்துபோய் நின்று விட்டோம். நல்ல வேளையாக ஸ்னேகா எங்களுக்கு உதவிக்கு வந்தார்.அத்தோடு கிராமத்தினரும் எங்களுக்கு பேருதவி புரிந்தனர். அவர்களை மறக்கவேமுடியாது என்றார்.

விழாவுக்கு வந்திருந்த சந்தியா குட்டைப் பாவாடை, மேல் சட்டையுடன் படுகிளாமராக வந்திருந்ததான் அவரது இந்த பீதிக்கு முக்கியக் காரணமே!

நெசமாலுமே நல்ல நேரந்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil