வந்தே மாதரம் மாறியது!
தமிழ் மற்றும் மலையாளத்தில் மம்முட்டி நடிக்க ஒரே நேரத்தில் தயாராகி வரும் வந்தே மாதரம் படத்தின் பெயரை அறுவடை என மாற்றி விட்டனர்.
மம்முட்டி நடிக்க, மறுமலர்ச்சிப் படத் தயாரிப்பாளர் ஹென்றி தயாரிப்பில் உருவாகும் படம் வந்தே மாதரம். ஒரே நேரத்தில் தமிழிலும், மலையாளத்திலும் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.மலையாளத்தில் வந்தே மாதரம் என்ற பெயருக்கு சிக்கல் ஏற்படவில்லை. தமிழிலும் அதே பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஹென்றி முடிவு செய்தார். ஆனால் தமிழ் சினிமாவில், தமிழில் பெயர் வைத்தால்தான் அரசின் வரிச் சலுகை கிடைக்கும் என்பதால், குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து தற்போது அறுவடை என படத்தின் பெயரை மாற்றி விட்டார்களாம். இது சுத்தமான தமிழ் வார்த்தை என்பதால் புது உற்சாகத்தோடு படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள்.
இப்படத்தில் சினேகா நடிக்கிறார். முதல் முறையாக விமானி வேடத்தில் நடிக்கவுள்ளதால், பெண் விமானிகள் குறித்த தகவல்களை சேகரித்து வீட்டில் ஹோம் ஒர்க் செய்து வருகிறாராம்.
கடைசியில், பணத்திற்காக தேச பக்தியை லூசிஸ் விட்டு விட்டார்களே!
More from Filmibeat
actors actress cine news cinema awards cinema news film shooting heroines kollywood movie news movie pooja muhurtams tamil cinema industry tamil gossip tamil heros tamil movie reviews tamil movies


Click it and Unblock the Notifications











