ஸ்னேகாவின் தானம் அன்னதானம், ரத்த தானம், கண்தானம் என ஏகப்பட்ட நல்ல விஷயங்களை நம்மில்பலர் சத்தம் போடாமல் செய்து வருகின்றனர். அத்தோடு இப்போது உடல் தானம்வேகமாக பிக்கப் ஆகி வருகிறது.உடல் தானம் என்ற கான்செப்ட் வெளிநாடுகளில் ரொம்ப சாதாரண விஷயமாகஇருந்தாலும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அவ்வளவாக பிரபலமாகவில்லை.அதைப் பற்றிய விழிப்புணர்வு கொறச்சல் என்பதால்தான் இந்த நிலை. ஆனாலும்சிலசினிமாக்காரர்கள் இந்த நல்ல காரியத்தை பிரபலப்படுத்தியுள்ளதால், மக்கள்மத்தியில் இந்த விஷயம் மெல்ல பேசப்பட ஆரம்பித்துள்ளது.நடிகர் கமல்ஹாசனுக்குத்தான் இதற்கு நன்றி சொல்ல வேண்டும். தனது உடலைசென்னை மருத்துவக் கல்லூரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தானமாக கொடுத்தவர்கமல். இதற்கு அவரது மகள் ஸ்ருதி தான் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டார்.அவரைத் தொடர்ந்து அவரது மன்றத்தினர் பலரும் உடல் தானம் செய்துள்ளனர்.இப்போது ஒரு நடிகை இந்த நல்ல செயலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார். அவர்வேறு யாருமல்ல புன்னகை இளவரசி ஸ்னேகாதான். பலமுறை ரத்ததானம் செய்தபுண்ணியத்தைப் பெற்றவர் ஸ்னேகா.கடந்த ஆண்டு தனது பிறந்த நாளின்போது கண் தானம் செய்தார். இந்த ஆண்டு பிறந்தநாளின்போது என்ன நல்ல காரியம் செய்யலாம் என்று யோசித்த அவருக்குதோன்றியது உடல் தானம்தான்.தனது பிறந்தநாளின்போது இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக்கொடுக்கவுள்ளாராம். என்ன திடீர்னு உடல்தானம் என்று கேட்டால்,வீணாக மண்ணுக்குள் போகப் போகும் இந்த உடலால், எத்தனையை இளம்டாக்டர்களுக்கு பயன் ஏற்படும் என்பதைக் கேள்விப்பட்டே மனப்பூர்வமாக இந்தஉடல் தானத்திற்கு முடிவு செய்தேன்.இதன் மூலம் எனக்கு ஆத்மார்த்தமான திருப்தி உண்டாகிறது. நல்ல செயலுக்காகஎனது உடல் பயன்படுகிறது என்பதால் கூடுதல் சந்தோஷம் ஏற்படுகிறது என்கிறார்டிரேட் மார்க் புன்னகையுடன்.நாக்ரவி தொல்லையிலிருந்து மீண்டுள்ள ஸ்னேகா இப்போது முழு மூச்சாக தனதுநடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.புதுப்பேட்டை ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதால் சந்தோஷத்துடன் காணப்படுகிறார்.இந்தப் படம் வரட்டும், அதன் பிறகு ஸ்னேகாவுக்குள் ஒளிந்திருக்கும் நடிப்புத்திறமையை பார்த்து அசந்து போய் விடுவீர்கள் என்று உதட்டைச் சுழித்து செல்லமாகசவால் விடுகிறார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் ஸ்னேகா,இனிமேல் ஏனோ தானோவென்று நடிக்க மாட்டாராம். நல்ல கேரக்டர்களாகப் பார்த்துபார்த்து நடிக்கப் போகிறாராம். நடித்தால் ஏதாவது ஒரு விருது கிடைக்க வேண்டும்என்ற லட்சியத்துடன் புதிய பாதையில் நடக்கப் போகிறேன் என்கிறார் ஸ்னேகா.அத்தோடு இப்போதைக்கு கல்யாணப் பேச்சையே எடுக்க வேண்டாம் என்றுவூட்டிலும் பொடா போட்டு விட்டாராம். எனக்காக கல்யாணம் செய்யனும் என்றுதோன்றும்போது சொல்கிறேன், அப்போது ஆளைப் பார்த்தால் போதும் என்றுகண்டிஷனாக சொல்லி விட்டாராம்.அப்படிப் போடு அருவாளை!

By Staff

அன்னதானம், ரத்த தானம், கண்தானம் என ஏகப்பட்ட நல்ல விஷயங்களை நம்மில்பலர் சத்தம் போடாமல் செய்து வருகின்றனர். அத்தோடு இப்போது உடல் தானம்வேகமாக பிக்கப் ஆகி வருகிறது.

உடல் தானம் என்ற கான்செப்ட் வெளிநாடுகளில் ரொம்ப சாதாரண விஷயமாகஇருந்தாலும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அவ்வளவாக பிரபலமாகவில்லை.

அதைப் பற்றிய விழிப்புணர்வு கொறச்சல் என்பதால்தான் இந்த நிலை. ஆனாலும்சிலசினிமாக்காரர்கள் இந்த நல்ல காரியத்தை பிரபலப்படுத்தியுள்ளதால், மக்கள்மத்தியில் இந்த விஷயம் மெல்ல பேசப்பட ஆரம்பித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனுக்குத்தான் இதற்கு நன்றி சொல்ல வேண்டும். தனது உடலைசென்னை மருத்துவக் கல்லூரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தானமாக கொடுத்தவர்கமல். இதற்கு அவரது மகள் ஸ்ருதி தான் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டார்.

அவரைத் தொடர்ந்து அவரது மன்றத்தினர் பலரும் உடல் தானம் செய்துள்ளனர்.


இப்போது ஒரு நடிகை இந்த நல்ல செயலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார். அவர்வேறு யாருமல்ல புன்னகை இளவரசி ஸ்னேகாதான். பலமுறை ரத்ததானம் செய்தபுண்ணியத்தைப் பெற்றவர் ஸ்னேகா.

கடந்த ஆண்டு தனது பிறந்த நாளின்போது கண் தானம் செய்தார். இந்த ஆண்டு பிறந்தநாளின்போது என்ன நல்ல காரியம் செய்யலாம் என்று யோசித்த அவருக்குதோன்றியது உடல் தானம்தான்.

தனது பிறந்தநாளின்போது இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக்கொடுக்கவுள்ளாராம். என்ன திடீர்னு உடல்தானம் என்று கேட்டால்,

வீணாக மண்ணுக்குள் போகப் போகும் இந்த உடலால், எத்தனையை இளம்டாக்டர்களுக்கு பயன் ஏற்படும் என்பதைக் கேள்விப்பட்டே மனப்பூர்வமாக இந்தஉடல் தானத்திற்கு முடிவு செய்தேன்.

இதன் மூலம் எனக்கு ஆத்மார்த்தமான திருப்தி உண்டாகிறது. நல்ல செயலுக்காகஎனது உடல் பயன்படுகிறது என்பதால் கூடுதல் சந்தோஷம் ஏற்படுகிறது என்கிறார்டிரேட் மார்க் புன்னகையுடன்.


நாக்ரவி தொல்லையிலிருந்து மீண்டுள்ள ஸ்னேகா இப்போது முழு மூச்சாக தனதுநடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

புதுப்பேட்டை ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதால் சந்தோஷத்துடன் காணப்படுகிறார்.இந்தப் படம் வரட்டும், அதன் பிறகு ஸ்னேகாவுக்குள் ஒளிந்திருக்கும் நடிப்புத்திறமையை பார்த்து அசந்து போய் விடுவீர்கள் என்று உதட்டைச் சுழித்து செல்லமாகசவால் விடுகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் ஸ்னேகா,இனிமேல் ஏனோ தானோவென்று நடிக்க மாட்டாராம். நல்ல கேரக்டர்களாகப் பார்த்துபார்த்து நடிக்கப் போகிறாராம். நடித்தால் ஏதாவது ஒரு விருது கிடைக்க வேண்டும்என்ற லட்சியத்துடன் புதிய பாதையில் நடக்கப் போகிறேன் என்கிறார் ஸ்னேகா.

அத்தோடு இப்போதைக்கு கல்யாணப் பேச்சையே எடுக்க வேண்டாம் என்றுவூட்டிலும் பொடா போட்டு விட்டாராம். எனக்காக கல்யாணம் செய்யனும் என்றுதோன்றும்போது சொல்கிறேன், அப்போது ஆளைப் பார்த்தால் போதும் என்றுகண்டிஷனாக சொல்லி விட்டாராம்.

அப்படிப் போடு அருவாளை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X