ஸ்னேகாவின் சினிமாகேஸ் போட்ட நாக்ரவி நடிகை ஸ்னேகா மற்றும் மலேசிய தொழிலதிபர் நாக் ரவி ஆகியோரின் காதல்கதையை பின்னணியாகக் கொண்டு தெலுங்கில் தயாரிக்கப்படும் படத்திற்கு சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஸ்னேகாவுக்கும், மலேசியத் தொழிலதிபரான நாக் ரவிக்கும் இடையிலான காதல்,பார்ட்டி, நிச்சயதார்த்தம், கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.ஆனால் இந்த செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இந்தக் காதலை ஸ்னேகாமறுத்தார். ஆனால் நாக் ரவி உண்மைதான் என்றார். இதையடுத்து தன்னை தொந்தரவுசெய்யக் கூடாது என நாக் ரவிக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார் ஸ்னேகா.இதையடுத்து ஸ்னேகாவுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது எனவும் நாக் ரவிக்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந் நிலையில், ஸ்னேகா நடிக்கும் தெலுங்குப் படத்திற்கு தடை கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் நாக் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நானும், ஸ்னேகாவும்காதலித்தோம். நிச்சயதார்த்தமும் நடந்தது. சில பிரச்சினைகளால் அது நின்று போனது. ஆனால், இப்போது ஸ்னேகாவே நடிக்க நாகபூஷனம் என்பவரது இயக்கத்தில் மனசுபாலிகா மவுன ராகம் என்ற பெயரில் தெலுங்குப் படம் தயாராகிறது. தமிழிலும்இப்படத்தை தயாரிக்கிறார்கள்.இந்தப் படம் எனக்கும் ஸ்னேகாவுக்கும் இடையிலான பழைய காதல் கதையைமையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இது வெளியானால் எனது நற்பெயருக்குகளங்கம் ஏற்படும். எனவே இப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், படத்திற்கு இடைக்காலத் தடைவிதித்தார். மேலும், விளக்கம் கேட்டு இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டார்.
நடிகை ஸ்னேகா மற்றும் மலேசிய தொழிலதிபர் நாக் ரவி ஆகியோரின் காதல்கதையை பின்னணியாகக் கொண்டு தெலுங்கில் தயாரிக்கப்படும் படத்திற்கு சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஸ்னேகாவுக்கும், மலேசியத் தொழிலதிபரான நாக் ரவிக்கும் இடையிலான காதல்,பார்ட்டி, நிச்சயதார்த்தம், கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.ஆனால் இந்த செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இந்தக் காதலை ஸ்னேகாமறுத்தார். ஆனால் நாக் ரவி உண்மைதான் என்றார். இதையடுத்து தன்னை தொந்தரவுசெய்யக் கூடாது என நாக் ரவிக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார் ஸ்னேகா.
இதையடுத்து ஸ்னேகாவுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது எனவும் நாக் ரவிக்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந் நிலையில், ஸ்னேகா நடிக்கும் தெலுங்குப் படத்திற்கு தடை கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் நாக் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நானும், ஸ்னேகாவும்காதலித்தோம். நிச்சயதார்த்தமும் நடந்தது. சில பிரச்சினைகளால் அது நின்று போனது.
ஆனால், இப்போது ஸ்னேகாவே நடிக்க நாகபூஷனம் என்பவரது இயக்கத்தில் மனசுபாலிகா மவுன ராகம் என்ற பெயரில் தெலுங்குப் படம் தயாராகிறது. தமிழிலும்இப்படத்தை தயாரிக்கிறார்கள்.இந்தப் படம் எனக்கும் ஸ்னேகாவுக்கும் இடையிலான பழைய காதல் கதையைமையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இது வெளியானால் எனது நற்பெயருக்குகளங்கம் ஏற்படும். எனவே இப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், படத்திற்கு இடைக்காலத் தடைவிதித்தார். மேலும், விளக்கம் கேட்டு இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications