சினேகா, பிரசன்னாவுக்குத் தலை தீபாவளி!

By Sudha

காதல் தம்பதிகள் பிரசன்னாவும், சினேகாவும் தங்களது தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு உற்றார், உறவினர்கள், திரையுலகினர், நண்பர்கள் என சகல தரப்பினரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனராம்.

சத்தமில்லாத காதல்

சத்தமில்லாத காதல்

திரையுலகில் பலரும் காதலித்துள்ளனர், மணம் புரிந்துள்ளனர். ஆனால் சத்தம் போடாமல் காதலித்தவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. அந்த வரிசையில் சினேகா, பிரசன்னாவுக்கு முக்கிய இடம் உண்டு.

ரகசியம், படு ரகசியம்

ரகசியம், படு ரகசியம்

கல்யாணத்தையெல்லாம் முடிவு செய்த பின்னர்தான் சினேகா, பிரசன்னாவின் காதல் விவகாரமே வெளியில் தெரிய வந்தது. அதுவும் கூட அவர்களே போனால் போகிறதென்று சொல்லியதால்தான் மக்களுக்குத் தெரிய வந்தது. அதேசமயம், இருவரின் ஜோடிப் பொருத்தம் சூப்பர் என்று அத்தனை பேருமே மகிழ்ந்து கூறினர்.

அமர்க்களமான கல்யாணம்

அமர்க்களமான கல்யாணம்

சினேகா, பிரசன்னாவின் திருமணம் கடந்த மே 11ம் தேதி வெகு கோலாகலமாக சென்னையில் வைத்து நடந்தேறியது. அவர்களது கல்யாணத்திற்கு திரையுலகின் முக்கியஸ்தர்கள், நண்பர்கள் என பெரும் கூட்டம் திரண்டு வந்து வாழ்த்தியது.

முதலில் சினிமா, பிறகு ஹனிமூன்

முதலில் சினிமா, பிறகு ஹனிமூன்

திருமணத்திற்குப் பின்னர் உடனடியாக இருவரும் ஹனிமூன் போகவில்லை. மாறாக சினேகா நடிக்க வேண்டிய படம் இருந்ததால் அதை முடித்த பின்னரே இருவரும் தம்பதி சமேதராக ஹனிமூனுக்குக் கிளம்பிப் போயினர்.

ஜோடி போட்டு விளம்பரங்களில் பிசி

ஜோடி போட்டு விளம்பரங்களில் பிசி

திருமணத்திற்குப் பின்னர் இருவரும் சேர்ந்து படங்களை விட விளம்பரங்களில்தான் படு பிசியாகநடித்து வருகிறார்கள். அதுவும் இவர்களை வைத்து விதம் விதமான விளம்பரங்களைத் தயாரித்து கல்லா கட்டுகின்றன பல்வேறு நிறுவனங்களும்.

இன்று தலை தீபாவளி

இன்று தலை தீபாவளி

சினேகா, பிரசன்னா இருவரும் மனமொத்த காதல் தம்பதிகளாக வலம் வரும் நிலையில் இன்று தங்களது தலை தீபாவளியைக் கொண்டாடுகிறார்களாம். இதையொட்டி அவர்களுக்குப் பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றதாம்.

நாமும் வாழ்த்தி வைப்போம்...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X