For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழ் பேசினால் தப்பா? சீறும் சினேகா சினேகா கொஞ்ச நாட்களாக படு கோபமாக இருக்கிறார். யார் மீது தெரியுமா? தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீதுதான். சினேகாவின்கோபத்தில் ரொம்பவே நியாயம் இருப்பது போலவும் தெரிகிறது. குடும்பப் பாங்கான ரோல்களிலேயே நடித்து வந்தவர் சினேகா. அவரது அம்சமான முகமும், அட்டகாசமான புன்னகையும், அவருக்கு அதுபோன்றரோல்களையே வாரிக் கொடுத்தன. ஆனாலும் என்ன புரயோஜனம்? அதிக அளவில் படங்கள் வந்து குவியவில்லை.நல்லாத்தானே நடிக்கிறோம், அப்படியும் வாய்ப்பு ஏன் சரியாக இல்லை என்று சினேகா ஒரு நாள் உட்கார்ந்து பார்த்தபோது, ரகஸ்யா, கிரண், வண்டார்குழலி ஸ்மிதா என ஏகப்பட்ட குத்தாட்ட நாயகிகள் அவரது மனக் கண் முன்பு வந்து போனார்கள்.இதுதான் காரணமா என்ற தெளிவுக்கு வந்த சினேகாவும், கிளாமர் களத்தில் குதித்தார். லேசு பாசாக அவர் கவர்ச்சி காட்டத் தொடங்கவே ரசிகர்கள்அதிருப்தி அடைந்தனர். நீங்க போய் இப்படியெல்லாம் நடிக்கலாமா என்று செல்லமாக அவர்கள் கோபிக்கவே, குழப்பமாகிப் போனார் சினேகா.ஆனாலும் இப்போது தெளிவாகி விட்டார். நடித்தால், டீசன்ட்டாக நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதனால் வருகிற ரோல்களை எல்லாம்ஏற்காமல், தனக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும்படியான, நல்லதனமான கேரக்டர்களை மட்டுமே பார்த்து பார்த்துச் செய்கிறார்.இப்போது சினேகா வசம் இரண்டு படங்கள் உள்ளன. புதுப்பேட்டையில் விலைமாது கேரக்டரிலும், ஏபிசிடியில் விதவை ரோலிலும் கலக்கிவருகிறாராம். குறிப்பாக புதுப்பேட்டை பட கேரக்டர் அவருக்கு விருதையே வாங்கிக் கொடுக்கலாமாம்.ஒரு வழியாக மனக் குழப்பம் நீங்கி படு உற்சாகமாக நடித்து வரும் சினேகாவிடம், கவர்ச்சிப் போட்டியை எப்படித் தாக்குப் பிடிக்கிறீங்க என்றுகேட்டதுதான் தாமதம், பொறிந்து தள்ளி விட்டார் இந்த புன்னகை இளவரசி.ஏங்க, தமிழ்ப் பொண்ணா பொறந்தது தப்பா? இல்லை தமிழில் பேசினாலே தப்பா? ஏன் தான் நம்ம ஊர் சினிமாக்காரங்க கவர்ச்சியின் பின்னால் இப்படிஅலையறாங்களோ தெரியவில்லை. அதிலும் தமிழ் பேசும் நடிகை என்ற ஒரே காரணத்திற்காகவே என்னை ரொம்பவே கடுப்படிக்கிறாங்க.என்னைப் பத்தி எத்தனையோ வதந்திகள். இவற்றை பரப்புவது சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான். என்னோட கால்ஷீட் கிடைக்காத, என்கிட்டே எதிர்பார்த்தது கிடைக்காத காரணத்தால் இவற்றை பரப்பி விட்டுட்டாங்க.ஒரு நடிகருடன் (ஸ்ரீகாந்த்) காதல், விரும்புகிறேன் பட இயக்குநருடன் மோதல், துபாயில் எனக்கு கல்யாணமாகி விட்டது, நடிகர் ஷாம் எனது உதடுகளைகடித்து விட்டார் என ஏகப்பட்ட வதந்திகள். எல்லாமே பொய் என்பதை சொல்லி விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துத்தான் இவைஎவற்றுக்குமே பதில் சொல்லவில்லை.கடந்த வாரம் கூட வடபழனியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நானும், ஒரு நிறுவன அதிபரும் ரகசியமாக சந்தித்து இரவு விருந்து சாப்பிட்டதாக செய்திகள்வந்தன. இது மாதிரியான செய்திகளால் நான் விரக்தியடைந்துள்ளேன். சினிமாவில்தான் தாஜ் கோரமண்டல், சோழா போன்ற நட்சத்திர ஹோட்டல்களைப் பார்த்துள்ளேன். இந்த ஹோட்டல்களுக்கு நான் இதுவரை போனதேஇல்லை. எனது வீட்டில் கூட இரவு சாப்பாட்டுக்கு எங்காவது போக வேண்டும் என்று சொன்னால் கூட நான் மறுத்து விடுவேன். எங்கே போனாலும்,பகலிலேயே போகலாம். இல்லாவிட்டால் நான் இவருடன் போனேன், அவருடன் போனேன் என்று கதை கட்டி விடுவார்கள் என்று கூறி விடுவேன்.என்னைப் பற்றி இத்தனை வதந்திகள் வருவதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. அது நான் தமிழ் பேசும் பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் என்பதுதான்.இதுவே நான் மும்பையிலிருந்தோ அல்லது கேரளாவிலிருந்தோ வந்திருந்தால் என்னைத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கியிருப்பார்கள். நான் என்னகேட்டாலும் செய்து கொடுப்பார்கள், விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.துரதிர்ஷ்டவசமாக நான் தமிழச்சியாகப் போய் விட்டதால் என்னை வதந்திகளால் துரத்துகிறார்கள். இது மிகவும் மோசமானது. தமிழ் நாட்டுப் பெண்ணுக்குதமிழகத்திலேயே இத்தனை அவலங்கள் என்றால் நான் எங்கே போய் முறையிடுவது என்று புலம்புகிறார் சினேகா.சினேகா புலம்பலிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் வெளியூரில் கிடைக்கும் மரியாதையில் துக்கனூண்டு கூடதமிழகத்தில் கிடைப்பதில்லை என்பதை சினேகாவுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை!

  By Staff
  |

  சினேகா கொஞ்ச நாட்களாக படு கோபமாக இருக்கிறார். யார் மீது தெரியுமா? தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீதுதான். சினேகாவின்கோபத்தில் ரொம்பவே நியாயம் இருப்பது போலவும் தெரிகிறது.

  குடும்பப் பாங்கான ரோல்களிலேயே நடித்து வந்தவர் சினேகா. அவரது அம்சமான முகமும், அட்டகாசமான புன்னகையும், அவருக்கு அதுபோன்றரோல்களையே வாரிக் கொடுத்தன. ஆனாலும் என்ன புரயோஜனம்? அதிக அளவில் படங்கள் வந்து குவியவில்லை.

  நல்லாத்தானே நடிக்கிறோம், அப்படியும் வாய்ப்பு ஏன் சரியாக இல்லை என்று சினேகா ஒரு நாள் உட்கார்ந்து பார்த்தபோது, ரகஸ்யா, கிரண், வண்டார்குழலி ஸ்மிதா என ஏகப்பட்ட குத்தாட்ட நாயகிகள் அவரது மனக் கண் முன்பு வந்து போனார்கள்.


  இதுதான் காரணமா என்ற தெளிவுக்கு வந்த சினேகாவும், கிளாமர் களத்தில் குதித்தார். லேசு பாசாக அவர் கவர்ச்சி காட்டத் தொடங்கவே ரசிகர்கள்அதிருப்தி அடைந்தனர். நீங்க போய் இப்படியெல்லாம் நடிக்கலாமா என்று செல்லமாக அவர்கள் கோபிக்கவே, குழப்பமாகிப் போனார் சினேகா.

  ஆனாலும் இப்போது தெளிவாகி விட்டார். நடித்தால், டீசன்ட்டாக நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதனால் வருகிற ரோல்களை எல்லாம்ஏற்காமல், தனக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும்படியான, நல்லதனமான கேரக்டர்களை மட்டுமே பார்த்து பார்த்துச் செய்கிறார்.

  இப்போது சினேகா வசம் இரண்டு படங்கள் உள்ளன. புதுப்பேட்டையில் விலைமாது கேரக்டரிலும், ஏபிசிடியில் விதவை ரோலிலும் கலக்கிவருகிறாராம். குறிப்பாக புதுப்பேட்டை பட கேரக்டர் அவருக்கு விருதையே வாங்கிக் கொடுக்கலாமாம்.

  ஒரு வழியாக மனக் குழப்பம் நீங்கி படு உற்சாகமாக நடித்து வரும் சினேகாவிடம், கவர்ச்சிப் போட்டியை எப்படித் தாக்குப் பிடிக்கிறீங்க என்றுகேட்டதுதான் தாமதம், பொறிந்து தள்ளி விட்டார் இந்த புன்னகை இளவரசி.

  ஏங்க, தமிழ்ப் பொண்ணா பொறந்தது தப்பா? இல்லை தமிழில் பேசினாலே தப்பா? ஏன் தான் நம்ம ஊர் சினிமாக்காரங்க கவர்ச்சியின் பின்னால் இப்படிஅலையறாங்களோ தெரியவில்லை. அதிலும் தமிழ் பேசும் நடிகை என்ற ஒரே காரணத்திற்காகவே என்னை ரொம்பவே கடுப்படிக்கிறாங்க.


  என்னைப் பத்தி எத்தனையோ வதந்திகள். இவற்றை பரப்புவது சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான். என்னோட கால்ஷீட் கிடைக்காத, என்கிட்டே எதிர்பார்த்தது கிடைக்காத காரணத்தால் இவற்றை பரப்பி விட்டுட்டாங்க.

  ஒரு நடிகருடன் (ஸ்ரீகாந்த்) காதல், விரும்புகிறேன் பட இயக்குநருடன் மோதல், துபாயில் எனக்கு கல்யாணமாகி விட்டது, நடிகர் ஷாம் எனது உதடுகளைகடித்து விட்டார் என ஏகப்பட்ட வதந்திகள். எல்லாமே பொய் என்பதை சொல்லி விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துத்தான் இவைஎவற்றுக்குமே பதில் சொல்லவில்லை.

  கடந்த வாரம் கூட வடபழனியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நானும், ஒரு நிறுவன அதிபரும் ரகசியமாக சந்தித்து இரவு விருந்து சாப்பிட்டதாக செய்திகள்வந்தன. இது மாதிரியான செய்திகளால் நான் விரக்தியடைந்துள்ளேன்.

  சினிமாவில்தான் தாஜ் கோரமண்டல், சோழா போன்ற நட்சத்திர ஹோட்டல்களைப் பார்த்துள்ளேன். இந்த ஹோட்டல்களுக்கு நான் இதுவரை போனதேஇல்லை. எனது வீட்டில் கூட இரவு சாப்பாட்டுக்கு எங்காவது போக வேண்டும் என்று சொன்னால் கூட நான் மறுத்து விடுவேன். எங்கே போனாலும்,பகலிலேயே போகலாம். இல்லாவிட்டால் நான் இவருடன் போனேன், அவருடன் போனேன் என்று கதை கட்டி விடுவார்கள் என்று கூறி விடுவேன்.

  என்னைப் பற்றி இத்தனை வதந்திகள் வருவதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. அது நான் தமிழ் பேசும் பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் என்பதுதான்.இதுவே நான் மும்பையிலிருந்தோ அல்லது கேரளாவிலிருந்தோ வந்திருந்தால் என்னைத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கியிருப்பார்கள். நான் என்னகேட்டாலும் செய்து கொடுப்பார்கள், விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.


  துரதிர்ஷ்டவசமாக நான் தமிழச்சியாகப் போய் விட்டதால் என்னை வதந்திகளால் துரத்துகிறார்கள். இது மிகவும் மோசமானது. தமிழ் நாட்டுப் பெண்ணுக்குதமிழகத்திலேயே இத்தனை அவலங்கள் என்றால் நான் எங்கே போய் முறையிடுவது என்று புலம்புகிறார் சினேகா.

  சினேகா புலம்பலிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் வெளியூரில் கிடைக்கும் மரியாதையில் துக்கனூண்டு கூடதமிழகத்தில் கிடைப்பதில்லை என்பதை சினேகாவுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X