ஸ்னேகாவுக்கு டும்..டும்..? ஸ்னேகா குறித்து மீண்டும் ஒரு ஹாட் நியூஸ். அவருக்கும் ஷார்ஜாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கும் விரைவில் திருமணம்நடக்கப் போகிறதாம்.சாட்சாத் தமிழ்ப் பெண்ணான ஸ்னேகா, துபாயில் வளர்ந்தவர். அவரது தந்தை அங்கு பணியாற்றியதால் குடும்பமும் அங்கு தான்இருந்தது. பின்னர் டான்ஸ் மாஸ்டர் கலாவின் உதவியால், ஒரு வார இதழ் நடத்திய போட்டியில் பங்கேற்று அதன் அட்டைப்படத்தில் இடம் பெற்று சினிமாவுக்கு வந்தவர் ஸ்னேகா.இப்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்னேகா குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்கசமுசா நியூஸ் வந்தது. சென்னையின் பிரபலமான நிறுவனத்தின் அதிபர் மகனோடு இருந்தபோது மாட்டியதாக செய்தி வந்தது.இதையடுத்து இயக்குனர் செல்வராகவனுடன் காதல் என்ற கிசுகிசு கிளம்பியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக அடுத்த விஷயம் கிளம்பியுள்ளது. ஆனால், இது நல்ல விஷயம் தான்.செல்வராகவனின் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் நடித்து வரும் ஸ்னேகா, ஏபிசிடி படத்தை முடித்துவிட்டார். இதைத் தவிரதமிழில் புதுப் படம் எதையும் அவர் ஏற்கவில்லை.இதற்குக் காரணம் அவருக்கும் ஷார்ஜாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது தான்என்கிறார்கள் கோலிவுட்டில்.நாக்ரவி என்ற அந்த தொழிலதிபர் இந்தியப் படங்களை வெளிநாடுகளில் திரையிடும் பெரிய வினியோக நிறுவனம் நடத்திவருகிறாராம். ஏற்கனவே ஸ்னேகா மற்றும் நாக்ரவியின் குடும்பத்தினருக்கும் பரிச்சம் உண்டு என்றும் இப்போது அதுநிச்சயதார்த்தத்தில் போய் முடிந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.சில தெலுங்குப் படங்களை முடித்துத் தர வேண்டியிருப்பதால் அடுத்த இரு மாதங்களில் கல்யாணம் இருக்கும் என்கிறார்கள்.

By Staff

ஸ்னேகா குறித்து மீண்டும் ஒரு ஹாட் நியூஸ். அவருக்கும் ஷார்ஜாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கும் விரைவில் திருமணம்நடக்கப் போகிறதாம்.

சாட்சாத் தமிழ்ப் பெண்ணான ஸ்னேகா, துபாயில் வளர்ந்தவர். அவரது தந்தை அங்கு பணியாற்றியதால் குடும்பமும் அங்கு தான்இருந்தது. பின்னர் டான்ஸ் மாஸ்டர் கலாவின் உதவியால், ஒரு வார இதழ் நடத்திய போட்டியில் பங்கேற்று அதன் அட்டைப்படத்தில் இடம் பெற்று சினிமாவுக்கு வந்தவர் ஸ்னேகா.

இப்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்னேகா குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்கசமுசா நியூஸ் வந்தது. சென்னையின் பிரபலமான நிறுவனத்தின் அதிபர் மகனோடு இருந்தபோது மாட்டியதாக செய்தி வந்தது.


இதையடுத்து இயக்குனர் செல்வராகவனுடன் காதல் என்ற கிசுகிசு கிளம்பியுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக அடுத்த விஷயம் கிளம்பியுள்ளது. ஆனால், இது நல்ல விஷயம் தான்.

செல்வராகவனின் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் நடித்து வரும் ஸ்னேகா, ஏபிசிடி படத்தை முடித்துவிட்டார். இதைத் தவிரதமிழில் புதுப் படம் எதையும் அவர் ஏற்கவில்லை.

இதற்குக் காரணம் அவருக்கும் ஷார்ஜாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது தான்என்கிறார்கள் கோலிவுட்டில்.


நாக்ரவி என்ற அந்த தொழிலதிபர் இந்தியப் படங்களை வெளிநாடுகளில் திரையிடும் பெரிய வினியோக நிறுவனம் நடத்திவருகிறாராம். ஏற்கனவே ஸ்னேகா மற்றும் நாக்ரவியின் குடும்பத்தினருக்கும் பரிச்சம் உண்டு என்றும் இப்போது அதுநிச்சயதார்த்தத்தில் போய் முடிந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

சில தெலுங்குப் படங்களை முடித்துத் தர வேண்டியிருப்பதால் அடுத்த இரு மாதங்களில் கல்யாணம் இருக்கும் என்கிறார்கள்.

Read more about: sneha to get married soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X