சிலர் முழுசா டிரஸ் போட்டாலும் துப்பலான்னு தோனும்.. ஆனா நயன்தாரா நீச்சல் உடை... டிஸ்கோ சாந்தி பேட்டி
சென்னை: 1980-களிலும் 90-களிலும் நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு நடனத்தில் பிரபலமாக அறியப்பட்டவர் டிஸ்கோ சாந்தி.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று இந்தியா முழுக்க பல மொழிப் படங்களில் நடித்து, நடனமும் ஆடியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் டிஸ்கோ சாந்தி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

டிஸ்கோ சாந்தி
பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தன் அவர்களின் மகள்தான் டிஸ்கோ சாந்தி. பிரபல நடிகையும் நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியுமான லலிதா குமாரியின் மூத்த சகோதரி ஆவார். கமல், ரஜினி உள்ளிட்டோர் நடித்துள்ள பழைய படங்களில் அதிகமாக டிஸ்கோ சாந்தியை பார்க்கலாம். ஆனந்தனின் மகளாக இருந்தாலும் சாந்தி நடனத்தில் பெயர் போனவர் என்பதால் பத்திரிக்கையாளர்கள் டிஸ்கோ என்ற புனைப் பெயரை சேர்த்து டிஸ்கோ சாந்தி என்று பாராட்டி எழுதி புகழடைய செய்துவிட்டனர்.

சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதாவுடன் பல படங்களில் நடித்துள்ள டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா தயாரித்த மூன்று படங்களிலும் நடித்துள்ளாராம். தன்னை சில்க் ஸ்மிதாவிற்கு மிகவும் பிடிக்கும் என்றும் சில சமயம் இருவரும் சேர்ந்து ஆடிய பின் தன்னுடைய நடனம் நன்றாக இருந்தது என்று பொடி வைத்து விளையாட்டாக சீண்டுவார் என்றும் யாருடன் எப்படி பழக வேண்டும் என்று தெரிந்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதாதான் என்றும் டிஸ்கோ சாந்தி கூறியுள்ளார்.

இராத்திரி நேரத்து பூஜை
நடிகர் விஜயகாந்த் நடித்திருந்த ஊமை விழிகள் திரைப்படத்தில் மனோஜ் கியான் இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. அதில் இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடலில் டிஸ்கோ சாந்தி ஆடி இன்று வரை பிரபலமாக இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னர் அது சாமி பாடல் என்று நினைத்து வடபழனி கோவிலில் தினமும் அதிகாலை நான்கரை மணிக்கு ஒலிபரப்புவார்களாம். படம் வெளிவந்த பின்புதான் அதனை நிறுத்தினார்கள் என்று டிஸ்கோ சாந்தி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

நயன்தாரா
உடைகள் ஒரு நடிகையை எந்த வகையிலும் தவறான கண்ணோட்டத்தில் காட்டாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நடிகர் அஜித்துடன் நயன்தாரா நடித்த பில்லா படத்தில் நீச்சல் உடை அணிந்து வருவார். ஆனால் வக்கிரமான எண்ணத்தோடு பார்த்தால் கூட முகத்தை சுளிக்கும் அளவிற்கு அந்த கவர்ச்சி இருக்காது. பார்ப்பதற்கே நயன்தாரா அழகாக இருந்தார். ஆனால் சிலர் உடல் முழுவதையும் ஆடைகளால் போர்த்திக் கொண்டு வருவார்கள். அந்த உடை டைட்டாக இருக்கும்போது பார்ப்பதற்கே கேவலமாக தோன்றும். அவர்கள் முகத்தில் துப்பி விடலாம் என்ற அளவிற்கு அந்த உடை இருக்கும் என்று வெளிப்படையாக டிஸ்கோ சாத்தி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











