கமலின் விஸ்வரூபம்... சோனாக்ஷிக்கு ரூ 2 கோடி!!

By Shankar

Sonakshi Sinha
கமல் நடிக்கும் படத்துக்கு தலைப்பு விஸ்வரூபம் என்று சில தினங்களுக்கு முன்பே நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம். இந்தத் தலைப்பை நேற்று நடிகர் கமல்ஹாஸனும், இயக்குநர் செல்வராகவனும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சோனாக்ஷி சின்ஹாவுக்கு சம்பளமாக ரூ 2 கோடி பேசப்பட்டுள்ளதாம். ஆரம்பத்தில் ரூ 2.5 கோடியில் உறுதியாக இருந்த சோனாக்ஷி, செல்வராகவனுடன் பேசியபிறகு ரூ 2 கோடிக்கு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனுஷை வைத்து இயக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்ட செல்வராகவன், விஸ்வரூபம் வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

இந்தப் படத்தை தயாரிப்பது ஆஸ்கார் ரவிச்சந்திரனின் பேனர்தான் என்றாலும், உண்மையான தயாரிப்பாளர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்கிறார்கள். இவர் செல்வராகவனுக்கு மிகவும் நெருக்கமானவராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X