»   »  சோனியா-செல்வா கல்யாணம் முடிந்தது

சோனியா-செல்வா கல்யாணம் முடிந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை சோனியா அகர்வால், இயக்குநர் செல்வராகவன் திருமணம் தமிழ் முறைப்படிநடந்து முடிந்தது.

காதல் கொண்டேன் படத்தின் நாயகியான சோனியா அகர்வாலும், அப்படத்தைஇயக்கிய செல்வராகவனும் சத்தம் போடாமல் காதலித்து வந்தனர். காதலை முதலில்சோனியாதான் ஓப்பன் செய்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமலேயே அவருடன்நீண்ட நாட்கள் பழகி வந்தார் செல்வா.

ஒருவழியாக செல்வா காதலுக்கும், கல்யாணத்துக்கும் தலையாட்ட உடனடியாகதிருமண தேதியை நிச்சயித்தனர். அதன்படி இன்று இவர்களது கல்யாணம் சென்னைராஜா முத்தையா மண்டபத்தில் நடந்தது.

தமிழ் முறைப்படியும், வைதீக முறைப்படியும் திருமணம் நடந்தது. காலை 9.10மணிக்கு சோனியா கழுத்தில் செல்வராகவன் தாலி கட்டி மனைவியாக்கினார்.

திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் வந்திருந்துமணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ரவிகிருஷ்ணா, ரமேஷ் கண்ணா, நடிகைகள் சினேகா,சந்தியா மற்றும் ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களைவாழ்த்தினர்.

இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil