கால்ஷீட் மேனேஜராகும் சோனியா!
நடிகை சோனியா அகர்வாலுக்கும், இயக்குனர் செல்வராகவனுக்கும் டிசம்பர் 15ம்தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்குப் பின்னல் செல்வாவுக்கு உதவியாக படப்பிடிப்புகளில் சோனியாபணியாற்றவுள்ளாராம்.சோனியா அகர்வாலின் காதலை ஒரு வழியாக செல்வராகவன் ஏற்று கல்யாணம் வரைஅது இப்போது வந்து விட்டது. டிசம்பர் 15ம் தேதி கல்யாணம் நடைபெறவுள்ளது.சென்னை எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில திருமணம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மருமகன் தனுஷின்அண்ணன் திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்துகொள்கிறார். இதற்காக சிவாஜி படப்பிடிப்புக்கு ஒரு நாள் லீவு விடப் போகிறார்ரஜினி.
திருமண ஏற்பாடுகளை செல்வாவின் தந்தை கஸ்தூரி ராஜா, தாயார் விஜயலட்சுமி,தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, சோனியாவின் குடும்பத்தினர் இணைந்து செய்துவருகின்றனர். சோனியாவுக்கு சொந்த ஊர் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பின்னர் சோனியா நடிக்க மாட்டார். ஆனால் செல்வாவுக்குஉதவியாக பணியாற்றவுள்ளார். மேலும் அவரது கால்ஷீட்களை கவனிக்கும்மேனஜராகவும் புது அவதாரம் எடுக்கவுள்ளாராம்.
சோனியா கடைசியாக நடித்த படம் சதுரங்கம். அந்தப் படம் எப்போது வெளியாகும்என்று தெரியவில்லை. அதன் பின்னர் எந்தப் படத்தையும் சோனியா ஒப்புக்கொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications