புட்டி கண்ணாடி.. ஒல்லி உடம்பு.. தனுஷை வேண்டாம் என்று சொன்ன சோனியா அகர்வால் அம்மா!

சென்னை: தமிழில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.

கோவில், மதுர, 7/ஜி ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது அவர் நடித்து வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகை சோனியா அகர்வால்.

முதல் பட அனுபவம்

முதல் பட அனுபவம்

சினிமாவில் தெலுங்கு, கன்னட மொழி படங்களில் முதலில் கால் பதித்தவர் நடிகை சோனியா அகர்வால். அதன் பிறகு காதல் கொண்டேன் படம் தான் இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது. அதன்பிறகு கோவில் படத்தில் சிம்புவுடன், மதுர படத்தில் விஜய்யுடன் நடித்தார்.

ஒரு கல்லூரியின் கதை, திருட்டுப் பயலே, புதுப்பேட்டை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக சொல்லப்போனால் சாதாரண காதல் கதைகளில் இவர் தேர்ந்தெடுத்து நடிக்காமல், தனக்கேற்ற கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.

கதாபாத்திரம் தான் பேசும்

கதாபாத்திரம் தான் பேசும்

இவரது பெயரை விட, இவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்கள் மிகவும் பிரபலமானவை 7/ஜி ரெயின்போ காலனி படத்தில் அனிதா என்ற கதாபாத்திரமும், கோவில் படத்தில் ஏஞ்சல் என்ற கதாபாத்திரமும், காதல் கொண்டேன் படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரமும் மிகவும் பிரபலமானவை. இவர் நடித்த காதல் கொண்டேன் படத்தை எழுதி இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். அதேபோல் 7/ஜி ரெயின்போ காலனி படத்தை எழுதி இயக்கியவர் செல்வராகவன். இந்த இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

விவாகரத்து பெற்ற சோனியா

விவாகரத்து பெற்ற சோனியா

திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு இயக்குநர் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான நடிகர் தனுஷ் தனது இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்திருந்தார்.

வேண்டாம் என்று சொன்ன அம்மா

வேண்டாம் என்று சொன்ன அம்மா

காதல் கொண்டேன் படத்தில் நடிக்கப்போவதாக தன் அம்மாவிடம் சொன்ன சோனியா அகர்வால், ஹீரோ யாரு என்று கேட்டுள்ளார். தனுஷ் என்று சொன்னதும், அவரது தோற்றத்தை கண்டு இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று தடுத்துள்ளார். பார்க்க இருவருக்கும் கெமிஸ்ட்ரி செட் ஆகாது, வேண்டாம் என்று சொல்லி உள்ளார் சோனியா அகர்வாலின் அம்மா. ஆனால் கதை பிடித்திருக்கிறது நான் நடிக்கிறேன் என்று சோனியா அகர்வால் சொல்லி நடித்துள்ளார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அந்த கதைக்கு அப்படி ஒரு நாயகன் வேண்டுமென்று செல்வராகவன் வடிவமைத்தது பல பாராட்டுகளை பெற்றது.

மீண்டும் தனுஷ்

மீண்டும் தனுஷ்

காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு புதுப்பேட்டை படத்தில் சோனியா அகர்வால் தனுஷுடன் இணைந்து நடித்தார்.தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலின் கதாபாத்திரம், இருவரின் கெமிஸ்ட்ரி அந்த படத்திற்கு ஏற்றவாறு இருக்கும். கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துமிரட்டி இருப்பார். இது குறித்து சோனியா கூறுகையில். "நடிகர்கள் யார் என்று நான் பார்ப்பதில்லை. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடிக்கிறேன் என்று சோனியா அகர்வால் கூறியிருக்கிறார். அதேபோல் சோனியா அகர்வால் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார் சோனியா அகர்வால். தற்போது பஹீரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் சோனியா. பஹீரா திரைப்படத்தில் பிரபுதேவா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X