»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil


கனா கணடேனடி என்ற படத்தில் அறிமுகமாகிறார் மும்பையைச் சேர்ந்த மாடலான சோனி ராஜ்.

தமிழுக்கு இவர் புதிது தான் என்றாலும் ஆந்திராவில் பல படங்களில் கவர்ச்சியைக் கொட்டியவர் தான்.

தமிழில் வெளியாகவுள்ள குறும்பு படத்தின் ஹீரோ நரேஷுடன் தெலுங்கில் இவர் நடித்த ஒரு படத்தில் கவர்ச்சிப் பேயாட்டம் ஆடியுள்ளார்.

தமிழிலும் எதற்கும் தயார் என்று வந்திறங்கியுள்ளார்.

அப்பாசுக்கு எந்தப் படமும் ஓடாவிட்டாலும் அடுத்தடுத்து ஏதாவது ஒரு படம் கிடைத்துவிடுகிறது.

அந்த வகையில் கிடைத்துள்ள கனா கண்டேனடி படத்தின் சூட்டிங் சென்னையில் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.

அப்போது அப்பாசுடன் மிக நெருக்கமான காட்சிகளில் சோனி ராஜ் நடிக்க, காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்தக் காட்சிகளில் சோனி ராஜ் கலக்கிவிட்டாராம், கலக்கி.

அப்பாசுக்கே மூச்சுத் திணறும் அளவுக்கு சூடான காட்சிகளில் வேகம் காட்டினாராம் சோனி ராஜ்.

சென்னையில் முதல் ஷெட்யூலை முடித்துக் கொண்டு அடுத்து கேரளா, பாண்டிச்சேரிப் பக்கம் போயிருக்கிறது இந்தப் படத்தின் சூட்டிங் குழு.

சோனி ராஜின் கவர்ச்சி தவிர இசைக்கும் நடனத்துக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்களாம். கதைக்கு கொடுக்கலையாப்பா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil