Don't Miss!
- Sports
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் ருத்துராஜ்.. வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே.. அடித்து கூறும் விசயங்கள்
- Automobiles
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது?.. அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்
- Finance
பணவீக்கத்தினால் ஐடி பங்குகள் தடம் புரளுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Technology
விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!
- News
பெகாசஸ் உளவு வழக்கில் 29 செல்போன்கள் ஆய்வு! விசாரணை அறிக்கைக்கு காலஅவகாசம்! உச்சநீதிமன்றம் உத்தரவு
- Lifestyle
திருமணமான ஆண்கள் தினமும் 'இத' ஒரு கையளவு சாப்பிடுவது ரொம்ப நல்லதாம்... இது ஆண்களின் பல பிரச்சனையை போக்குமாம்..
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூரிக்கு வடிவேலுவ பார்த்தால் பயம்.. பிரபல காமெடி நடிகர் வெளிப்படையான பேச்சு!
சென்னை: வெகுளித்தனமான காமெடி வெள்ளந்தியான பேச்சின் மூலம் தமிழ் சினிமாவில் தனி ரசிகர்களை பெற்று முன்னணி காமெடியனாக உள்ளவர் நடிகர் சூரி
சூரி சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் அந்த வரிசையில் சூரி, சிவகார்த்திகேயன் கூட்டணியில் டான் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் வடிவேலுவை பார்த்தால் சூரிக்கு பயம் என பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்
தென்னிந்திய
நடிகர்
சங்கத்தின்
பொதுக்குழு
கூட்டம்…
முக்கிய
தீர்மானம்
!

பரோட்டா காமெடி
தீபாவளி,பீமா,வின்னர் உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் தலையை காட்டி நடித்து வந்த சூரிக்கு வெண்ணிலா கபடிகுழு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடிகுழு சூரி பரோட்டா காமெடி ரொம்ப பேமஸ் ஆனது அதன். பிறகு பலரும் நடிகர் சூரியை பரோட்டா சூரி எனவே பல ஆண்டுகளாக அழைத்து வந்தனர்.

வெள்ளந்தியான பேச்சு
சூரி நடித்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றனர் குறிப்பாக சூரியின் காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தன அதுமட்டுமல்லாமல் சூரியின் பாடி லாங்குவேஜ் கொஞ்சம் வடிவேலுவை போலவே இருந்ததால் மேலும் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தன

சிவகார்த்திகேயன் காம்போ
சினிமாவில் ஒரு சில ஹீரோக்களும் காமெடியன்களும் இணைந்து நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறும் அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,சூரி காம்போவில் வெளியாகி பட்டையை கிளப்பிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றது இதில் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் காமெடி ரொம்பவே பேசப்பட்டது அதன்பிறகு ரஜினிமுருகன்,சீமராஜா, மான் கராத்தே, நம்ம வீட்டு பிள்ளை மற்றும் தற்போது டான் வெளியாக உள்ளது.

பெயர் வாங்கி விடுவாரோ
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து காமெடி நடிகர்களும் சக காமெடியன்களை பார்த்தால் கொஞ்சம் பயம் தான் ஏனென்றால் தன்னை விட நன்றாக நடித்து விடுவாரோ பெயர் வாங்கி விடுவாரோ என நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் காமெடி நடிகர்கள் நடிக்கின்றனர் அப்படி தான் நடிகர் சூரியும் வடிவேலுவை பார்த்தால் கொஞ்சம் பயப்படுவார் என காமெடியன் டெலிபோன் ராஜ் அந்தப் பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.