பர்த்டே பார்ட்டியில் மச்சினி மகனை தூக்கி கொஞ்சும் தனுஷ்: வைரல் புகைப்படம்
Recommended Video

சென்னை: இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் கிருஷ்ணாவின் மூன்றாவது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்த பிறகு பெற்றோருடன் தங்கியுள்ளார். அவரின் மகன் வேத் கிருஷ்ணாவின் 3வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
அமெரிக்கா சென்றிருந்த தாத்தா ரஜினி பேரனின் பிறந்தநாளுக்கு சரியாக ஊர் திரும்பியுள்ளார்.

பெரியப்பா
வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் பார்ட்டியில் பெரியப்பா தனுஷ், பெரியம்மா ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனுஷ் வேத் கிருஷ்ணாவுடன் செல்லம் கொஞ்சும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் அக்கா மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். டி சர்ட், ஷார்ட்ஸ் அணிந்து பார்க்க குட்டிப் பையன் போன்று இருக்கிறார் அனிருத்.

பஸ்
குட்டிப் பையனுக்கு பஸ் வடிவில் கேக் செய்து வைத்திருந்தனர். பேரன் கேக் மீதிருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்ததை தாத்தா பார்த்து மகிழ்ந்துள்ளார்.
சவுந்தர்யா
3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏஞ்சல் என் வாழ்வில் வந்தது. என் அதிசயம் என் மகன் என்று மகனை நினைத்து பெருமையாக ட்வீட்டியுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.

ஐஸ்வர்யா
தங்கச்சி மகனை ஐஸ்வர்யா தனுஷ் தூக்கி வைத்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. மகனின் முகத்தை வெளியுலகிற்கு காட்டாமல் வைத்திருந்த சவுந்தர்யா தற்போது காண்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











