தனக்கு வந்த விருதை மிர்ச்சி சிவாவிடம் கொடுத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்... என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர், பாடகர், வசனகர்த்தா, திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என்று பன்முகங்களை கொண்டவர் நடிகர் மிர்ச்சி சிவா.

தற்சமயம் காசேதான் கடவுளடா, சலூன், கோல்மால், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் ஃபோன் சிம்ரனும் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் தனக்கும் இடையே நடந்த சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

வீ.ஜே டூ நடிகன்

வீ.ஜே டூ நடிகன்

நடிகன் ஆக வேண்டும் என பள்ளிக் காலத்திலேயே முடிவெடுத்த சிவா எதேச்சையாக ரேடியோவில் இணைந்து ஜாக்கியானார். அதன் பின்னர் 12 B, ஆளவந்தான், விசில் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின் சென்னை 28 திரைப்படம் மூலம் கதாநாயகன் ஆனார். பழகுவதற்கும் பேசுவதற்கும் கலகலப்பான மனிதரான சிவா அனைவராலும் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

பல பேட்டிகள்

பல பேட்டிகள்

விருப்பமில்லாமல் ரேடியோவில் பணிபுரிந்தாலும், அங்குதான் நிறைய மக்களுடன் உரையாட முடிந்தது என கூறியுள்ள சிவா பல முன்னணி சினிமா நபர்களான கமல் ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.பி.பி போன்றவர்களை பேட்டி கண்டுள்ளார். ரேடியோ துறையிலிருந்து சினிமாவில் கதாநாயகனாக மாறியவர்களில் முதன்மையானவர் மிர்ச்சி சிவா. தற்சமயம் தான் நடித்துக் கொண்டிருக்கும் சுமோ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஒரு முறை தனது நிகழ்ச்சியில் மண்ணில் இந்தக் காதலன்றி பாடலில் நகைச்சுவையான வரிகளை போட்டு பாடினாராம் சிவா. பின்னர் எஸ்.பி.பி அவர்களை பேட்டி எடுக்க நேரிட்டபோது எஸ்.பி.பி.சரண் அதைப் பற்றி எஸ்.பி.பியிடம் கூறியிருக்கிறார். உடனே அவரும் பாடி காட்டச் சொன்னாராம். வேண்டாம் என்று சிவா தவிர்க்க முயற்சித்தும் எஸ்.பி.பி விடாமல் அவரை பாடச் சொல்லியிருக்கிறார். சிவா பாடி முடித்தவுடன் எஸ்.பி.பி கண் கலங்கியிருந்தாராம். ரசித்ததனால் அல்ல, சிரித்ததனால் கண் கலங்கியுள்ளார்.

விட்டுக் கொடுத்த விருது

விட்டுக் கொடுத்த விருது

தான் மிகவும் ரசித்துப் பார்த்த எஸ்.பி.பி தயாரித்த சென்னை 28-ல் தான் முதல் முறையாக கதாநாயகனாக நடித்தேன் என்றும் என்னுடைய முதல் பாடலை பாடியதும் அவர்தான் என்றும் பெருமையாக கூறியுள்ளார். ஒரு விருது வழங்கும் விழாவிற்கு எஸ்.பி.பி வராத காரணத்தினால் அந்த விருதை அவர் சார்பாக நான் வாங்கியிருந்தேன். பின்னர் அவரிடம் கொடுத்தபோது என்னைப் போல பாட்டு பாடினாய் அல்லவா அந்த விருதை நீயே வைத்துக் கொள் என்று எஸ்.பி.பி கூறியதாக மிர்ச்சி சிவா பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X