twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'லாலாலா... லாலாலா...' - எஸ்.ஏ.ராஜ்குமாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை :தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 200 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்தநாள் இன்று. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையால் கவரப்பட்டு இசையமைக்கத் தொடங்கியவர் இருபது வருடங்களுக்கு முன்பு பல ஹிட் பாடல்களைக் கொடுத்த எஸ்.ஏ.ராஜ்குமார்.

    ஆரம்பகாலம் :

    ஆரம்பகாலம் :

    இவரது அப்பா ஒரு மேடைப் பாடகர். சிறுவயதிலேயே திரைத்துறையில் மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் எனும் ஆர்வத்தோடு இருந்தார். ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்தவர் ராபர்ட் ராஜசேகரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவர் ராஜ்குமாரிடம் இருந்த இசைத்திறமையைக் கண்டறிந்து வாய்ப்புக் கொடுத்தார். யதேச்சையாக நடந்த இந்த வாய்ப்பு சில ஆண்டுகள் வெற்றிகரமான இசையமைப்பாளராக உச்சாணிக் கொம்பில் வைத்திருந்தது.

    இளையராஜாவின் காலம் அது :

    இளையராஜாவின் காலம் அது :

    ஒரு வருடத்தில் 100 படம் வந்தால் அவற்றில் 75 படங்கள் இளையராஜா இசையமைத்ததாக இருக்கும். இளையராஜாவின் இசையாட்சி நடந்துவந்த அந்தக் காலகட்டத்தில் அறிமுகமாகி, அதுவும் நடிகர் பிரபு தவிர, முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய 'சின்னப்பூவே மெல்லப்பேசு' திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் இன்னொரு மிக முக்கியமான விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதி இசையமைத்தது எஸ்.ஏ.ராஜ்குமார்தான்.

    பாடகர் அவதாரம் :

    பாடகர் அவதாரம் :

    கானா பாடல்களின் பிறப்பிடம் எனச் சொல்லப்படும் சென்னை திருவல்லிக்கேணிதான் ராஜ்குமாரின் ஏரியா. நண்பர்களுடன் கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது நிறைய பாடல்கள் எழுதிப் பாடுவாராம். அப்படிப் பாடும்போது எழுதி வைத்திருந்த பாடல்தான் இதே படத்தில் வந்த 'ஏ புள்ள கருப்பாயி...' பாடல் . இயக்குநரின் வற்புறுத்தலால் அந்தப் பாடலை அவரே பாடினார். அந்தப் படம் வந்த நேரத்தில் ஏகத்துக்கும் பிரபலமாகி இருந்தது இப்பாடல்.

    டி.ஆருக்குப் பின்பு :

    டி.ஆருக்குப் பின்பு :

    தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்ந்தது. கவிஞரான இவர் தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கிறார். 'ஒரு வழிப்பாதை' படத்தில் வில்லனாகவும் நடித்தார். 'முதல் பாடல்' என்ற படத்தை புதுமுகங்களை வைத்துத் தயாரித்து அதுவரை தன் பாடல்கள் மூலம் சேர்த்து வைத்த பணத்தையும் விரயம் செய்தார்.

    விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் கூட்டணி :

    எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு ராபர்ட் ராஜசேகர் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது போல, 'புதுவசந்தம்' மூலம் வாழ்க்கையே கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். 'இது முதல் முதலா வரும் பாட்டு' என்று பாடியே புதுவசந்தத்தை வெற்றி வசந்தமாக்கினார். 'புது வசந்தம்' படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட் ஆகின. இந்தப் படம் வந்த காலம், இவர் இசையமைத்த வகையிலான மெலடி பாடல்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டிருந்தது. அந்த ட்ரெண்டைப் பயன்படுத்தி வரிசையாக இசையமைத்துக் குவித்தார். பல படங்களின் பின்னணி இசையை எல்லாம் தனது 'லாலாலா...' கோரஸ்களாலேயே பின்னுக்குத் தள்ளினார்.

    தொடர் வெற்றி :

    ஆர்மோனியத்தை முக்கிய பலமாக வைத்துக் கொண்டு 'பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா...' என்று எஸ்.பி.பி-யும் சுசீலாவும் பாட, பட்டிதொட்டியெங்கும் ரிப்பீட் மோடில் ஒலித்துக்கொண்டிருந்தது அந்தப் பாடல்.

    பல வருடங்களாக உதவி இயக்குனராக இருந்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இயக்குனர் பட்டம் கொடுத்தது 'புரியாத புதிர்'. தங்களது முந்தைய தயாரிப்பான 'புது வசந்தம்' பெரிய வெற்றி கண்டதால் சூப்பர் குட் பிலிம்ஸ் எஸ்.ஏ.ராஜ்குமாரையே ஆஸ்தான இசையமைப்பாளராகப் பல காலம் வைத்திருந்தது. பிறகு என்ன ஆனது? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

    - தொடரும்...

    English summary
    Music director SA Rajkumar was a well-known music composer. He made his debut in tha movie 'chinnapoove mella pesu'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X