சினிமாவுக்கு ஸ்ரீசாந்த் ஸாரி!

By Staff
Click here for more images
இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. எனது முழுக் கவனமும் கிரிக்கெட்டில்தான் உள்ளது என்று இந்திய வேகப் பந்து வீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். பந்து வீச்சில் மட்டுமல்லாது கோபப்படுவதிலும், டான்ஸ் ஆடுவதிலும் கூட அதி வேகமாக இருக்கிறார் ஸ்ரீசாந்த்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுடனான தொடரின்போது ஸ்ரீசாந்த்தின் கோபத்தையும், அவர் செய்த கேலிகளையும் பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் கடுப்பாகி விட்டனர்.

இந்த நிலையில் ஸ்ரீசாந்த்தைத் தேடி சினிமா வாய்ப்பு வந்துள்ளது. மலையாள இயக்குநரான ஆசிக் அபு என்பவர் மம்முட்டி நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீசாந்த்தையும் நடிக்க வைக்க அவர் முயன்றார்.

ஆனால் அந்தப் படத்தை ஸ்ரீசாந்த் மறுத்து விட்டாராம். இப்போதைக்கு தனது கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளதாக கூறி விட்டாராம் ஸ்ரீசாந்த்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அப்படத்தில் நடிக்கவில்லை. அது மட்டுமல்லாது வேறு எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. இப்போது எனது முழுக் கவனமும் கிரிக்கெட்டில்தான் உள்ளது. பெரிய பெரிய தொடர்கள் எல்லாம் வரவுள்ளது. அதுகுறித்து மட்டுமே நான் சிந்தித்துக் கொண்டுள்ளேன் என்றார்.

20-20 உலகக் கோப்பைக்கு முன்பு ஜாகோ இந்தியா என்ற இசை ஆல்பத்திற்கு ஸ்ரீசாந்த் பாடல்கள் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X