மீண்டும் அமிதாப் - ஸ்ரீதேவி!

பாலிவுட்டில் இருவருமே ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ஜோடி. இன்குலாப், ஆக்ரி ராஸ்தா என வெற்றிப் படங்களில் நடித்தனர். கடைசியாக குதா கவா படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்தனர். மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது குதா கவா.
அதன் பிறகு போனி கபூரை திருமணம் செய்து கொண்டு ஸ்ரீதேவி திரையுலகிலிருந்து ஒதுங்கிவிட்டார். இடையில் ஒரு டிவி சீரியலில் நடித்தார். ஆனால் மீண்டும் இந்திப் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் அமிதாப்பையும் ஸ்ரீதேவியையும் ஜோடி சேர்த்துள்ளார் சீனி கும், பா படங்களை இயக்கிய பால்கி.
இந்தப் புதிய படத்துக்கு பிக் பி என பெயரிடப்பட்டுள்ளது (பாலிவுட்டில் அமிதாப்பை பிக் பி என்றுதான் மரியாதையாக அழைக்கிறார்கள்).
இந்தப் படத்துக்கும் இளையராஜாதான் இசையமைக்கிறார்!
Comments


Click it and Unblock the Notifications