மீண்டும் வரும் ஸ்ரீதேவி
முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். ஆனால்இம்முறை அவர் வருவது நடிப்பதற்காக அல்ல, தயாரிப்பதற்காக.
தென்னிந்திய ரசிகர்களை தூங்க விடாமல் செய்தவர் ஸ்ரீதேவி. பின்னர் இந்திக்கு இடம்பெயர்ந்து, உச்சத்திற்கு உயர்ந்தார். இப்போது முன்பு போல அவர் நடிப்பதில்லை.மாறாக டிவி சீரியல் தயாரிப்பது, படத் தயாரிப்பு என இறங்கி விட்டார்.தற்போது ஸ்ரீதேவி மீண்டும் தமிழுக்குத் திரும்புகிறார். இம்முறை அவர் தமிழில்வெளியாகி ஹிட் ஆன சார்லி சாப்ளின் என்ற படத்தின் 2ம் பாகத்தைத் தயாரிக்கப்போகிறார்.
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு, பிரபுதேவா நடிப்பில் வெளியான காமெடிப் படம்சார்லி சாப்ளின். இப்படத்தை நோ என்ட்ரி என்ற பெயரில் ஸ்ரீதேவியின் கணவர்போனி கபூர் இந்தியில் ரீமேக் செய்தார். இப்படம் இந்தியிலும் வெற்றி பெற்றது.அப்படத்தில் சல்மான் கான், அனில் கபூர், சைப் அலிகான் நடித்திருந்தனர்.
இப்போது சார்லி சாப்ளின் படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்க போனி முடிவுசெய்துள்ளார். இதுதொடர்பாக ஷக்தி சிதம்பரத்திடம் அவர் பேசியுள்ளார்.
இதற்காக ஸ்ரீதேவியுடன், போனி சென்னைக்கு வந்தார். அவர்களுடன் ஷக்திபேசியுள்ளார். 2ம் பாகத்தைத் தயாரிக்க விருப்பமாக இருப்பதாகவும், கதையை ரெடிசெய்யுமாறும் கோரியுள்ளனர். விரைவில் சொல்வதாக சொல்லியுள்ளேன் என்றார்ஷக்தி.


Click it and Unblock the Notifications