»   »  தெலுங்கில் ஸ்ரீதேவி பிசி!

தெலுங்கில் ஸ்ரீதேவி பிசி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் காணாமல் போய் விட்ட விஜயக்குமாரின் கடைசிப் புத்திரி ஸ்ரீதேவி தற்போது தெலுங்கில் திறமை காட்டி வருகிறார்.

விஜயக்குமார்-மஞ்சுளா தம்பதியினரின் கடைசி மகள் ஸ்ரீதேவி. ரிக்ஷா மாமாவில் குட்டிப் பாப்பாவாக சத்யராஜுடன் நடித்த ஸ்ரீதேவி இப்போதுமுழு நீள நாயகியாக திறமை காட்டி வருகிறார்.

தமிழில் அவருக்கு பெரிய அளவில் இன்னும் பிரேக் கிடைக்கவில்லை. தேவதையைக் கண்டேன் படத்தில் அவரது கேரக்டர் பேசப்பட்டது.இருப்பினும் அதற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் பாப்பா இப்போது தெலுங்கில் மிக பிஸியாக இருக்கிறார். 3 படங்களை முடித்துவிட்ட அவர் இப்போது அலபட்டி ரமேஷ்குமார் என்பவரின்தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் சிவாஜி, நரேஷ் ஆகிய இளம் நாயகர்களுடன் இணைந்து நடிக்கிறார் ஸ்ரீதேவி.

சத்யம் துவாரபுடி என்பவரின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ஸ்ரீதேவிக்கு கலக்கலான கேரக்டராம். படத்திற்குப் பூஜையைப் போட்டுவேகமாக ஷூட்டிங்கைத் தொடங்கியுள்ளனர்.

விஜயக்குமார் வீட்டு நாயகியர்களில் கொஞ்சம் போல பிரகாசித்தவர் ப்ரீதாதான். அவருக்கு அடுத்து ஸ்ரீதேவிதான் கொஞ்ச நாட்களாகதிரையுலகில் தொடர்ந்து உலா வந்து கொண்டுள்ளார்.

தமிழ் தன்னைக் கைவிட்டு விட்டாலும் கூட தெலுங்கு அடைக்கலம் தந்துள்ளதால் சந்தோஷமாகத்தான் இருக்கிறார் ஸ்ரீதேவி.

Read more about: sridevi busy in telugu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil