சென்னை வந்தார் ஷாருக் கான்- ரஜினியை சந்தித்து பேசினார்

சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியைப் பார்ப்பதற்காக ஷாருக் கான் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை சூழ்ந்த செய்தியாளர்கள் சென்னை விஜயம் குறித்துக் கேட்டபோது, சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியைப் பார்க்க வந்துள்ளேன்.
ரா ஒன் தமிழ்ப் பதிப்பின் டிரெய்லர் வெளியீடு நடைபெறவுள்ளது. அதிலும் பங்கேற்கவுள்ளேன் என்றார்.
ரஜினிகாந்த்தைப் பார்ப்பீர்களா என்ற கேள்விக்கு ரஜினியையும் சந்திப்பேன் என்றார் ஷாருக்
அதன் பின்னர் அவர் நேராக ரஜினிகாந்த்தை சந்திக்க அவர் புறப்பட்டுச் சென்றார். ரஜினி வீட்டை அடைந்த ஷாருக் கானை, ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் வாசலுக்கு வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
பின்னர் ஷாருக் கானை ரஜினி குடும்பத்தினர் உபசரித்தனர். பிறகு ரஜினி்யும், ஷாருக்கும் தனி அறையில் அமர்ந்து பேசினர். பின்னர் ஷாருக் கான் விடை பெற்றுத் திரும்பினார்.


Click it and Unblock the Notifications











