»   »  குத்துப் பாட்டுக்கு கமல் மகள் குரல்

குத்துப் பாட்டுக்கு கமல் மகள் குரல்

Subscribe to Oneindia Tamil

இந்தித் திரையுலகின் புதிய ஏ.ஆர். ரஹ்மான் ஹிமேஷ் ரேஷ்மையாவின் அதிரடிஇசையில் உருவாகியுள்ள பாடல் ஒன்றுக்கு கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி குரல்கொடுத்துள்ளார். இந்தப் பாட்டுக்கு ஆடியிருப்பவர் செக்ஸ் பாம் மல்லிகாஷெராவத்.

கமல்ஹாசன் 10 வேடம் பூண்டு நடிக்கும் தசாவதாரம் படத்தில்தான் இது நடந்துள்ளது.கமலுக்கு ஜோடி போட்டிருப்பவர்களில் மல்லிகாவும் ஒருவர். அவருக்காக ஒருஅதிவேக குத்துப் பாட்டை போட்டிருக்கிறார்கள்.

படு வேகமான இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் அமெரிக்காவில்படமாக்கப்படுகிறது. இந்தப் பாடலை ஸ்ருதிதான் பாட வேண்டும் என ரேஷ்மையாவிரும்பினார். இந்தத் தகவல் ஸ்ருதியையும் எட்டியது. நோ பிராப்ளம் என அவர்தலையாட்ட, உடனடியாக மும்பையில் உள்ள ரேஷ்மையாவின் ஸ்டூடியோவில்வைத்து பாட்டை பதிவு செய்தனர்.

தற்போது அமெரிக்காவில் ஷூட்டிங்குகாக முகாமிட்டுள்ள தசாவதாரம் படயூனிட்டுக்கு பாட்டு சூட்டோடு சூடாக அனுப்பி வைக்கப்பட்டது. மல்லிகாவை ஆடவைத்து இந்தப் பாடலை சுடவுள்ளனர்.

இந்தப் பாடல் படு வித்தியாசமானதாக அமைந்துள்ளது. அதாவது இது தமிழ்ப் பாடல்மட்டுமல்ல, இடை இடையே இந்தியும், ஆங்கிலமும் எட்டிப் பார்க்கிறதாம். ஒருகலவையான இந்தப் பாடலை, படு ரகளையாக எடுத்து இளைஞர்களுக்கு செமவிருந்து கொடுக்கப் போகிறாராம் கே.எஸ்.ரவிக்குமார். நியூயார்க்கில் வைத்துபாடலை சுடுகிறார் கேமராமேன் ரவிவர்மன்.

கமல்ஹாசனின் இரு மகள்களான ஸ்ருதி அம்மா சரிகாவுடன் மும்பையிலும்,இளையவரான அக்ஷரா, அப்பா கமலுடன் சென்னையிலும் வசிக்கின்றனர் என்பதுநினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil