»   »  மாதவனுக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன்!!

மாதவனுக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன்!!

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக நடிக்க வந்து விட்டார் கலைஞானி கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். மாதவனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஸ்ருதி.

கமல்ஹாசனின் இரு மகள்களில் மூத்தவரான ஸ்ருதி ஹாசன் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா கிராபிக்ஸில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்ருதியும் சினிமாத் துறையில் ஏதாவது ஒரு பிரிவில் புகுந்து கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

அதற்கேற்ப இசையில் அதிக நாட்டம் உடைய ஸ்ருதி, இசையமைப்பாளராக உருவெடுக்கும் நோக்கில் செயல்பட்டு வந்தார். முன்னோட்டமாக சில ஆல்பங்களையும் அவர் உருவாக்கி வந்தார். இந்த நிலையில் ஸ்ருதி நடிக்கவும் வருவார் என்ற பேச்சு எழுந்தது.

இதையடுத்து பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஸ்ருதியை நடிக்க வைக்க கமல்ஹாசனை அணுகினர். ஆனால் தனது விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை கமல்ஹாசன் ஸ்ருதிக்கு அளித்தார்.

லாஸ் ஏஞ்செலஸில் இசைப் படிப்பை முடித்த ஸ்ருதியின் முதல் ஹிந்துஸ்தானி இசை ஆல்பம் ரிலீஸுக்குத் தயாராகி உள்ளது. இந்த நிலையில், ஸ்ருதி தனது பெற்றோர் வழியில் நடிப்புக் கடலில் குதிக்க முடிவெடுத்து விட்டார்.

மராத்தி இயக்குநர் நிஷிகாந்த் இயக்கத்தில், மாதவனுடன் இணைந்து ஸ்ருதி நடிக்கப் போகிறார். இதே நிஷிகாந்த்தும், மாதவனும் இணைந்துதான் எவனோ ஒருவன் படத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மராத்தியில் வெளியான டோம்பிவிலி பாஸ்ட் படத்தின் ரீமேக்தான் எவனோ ஒருவன்.

மும்பை இசைப் புயல்கள் சங்கர் - ஈசான் - லாய் குழுவினர்தான் மாதவன் - ஸ்ருதி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கவுள்ளனர். ஸ்ருதி பாடல்களைப் பாடப் போகிறார்.

விருதுகளை வாரிக் குவித்துள்ள கலைக்குடும்பப் பின்ணனி, கமல்ஹாசன் - சரிகாவின் மகள், இசையில் ஞானம், நல்ல பாடகி என பல பிளஸ் பாயிண்டுகளுடன் நடிக்கு வந்துள்ள ஸ்ருதி மீது திரையுலகில் மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read more about: sruthi hamal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil