»   »  ஸ்டான்லி அண்ணா!

ஸ்டான்லி அண்ணா!

Subscribe to Oneindia Tamil

சத்யராஜ் நடிக்கும் பெரியார் படத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா துரை வேடத்தில் இயக்குநர் ஸ்டான்லிநடித்துள்ளார்.

ஞான ராஜசேகரன் இயக்கத்தில் பெரியாராக சத்யராஜ், மணியம்மையாக குஷ்பு, நாகம்மையாக ஜோதிர்மயிஆகியோர் நடிக்க பெரியாரின் வாழ்க்கை வரலாறு பெரியார் என்ற பெயரில் வளர்ந்து வருகிறது.

இந்தப் படத்தில் பெரியாரைப் போல வரலாற்று நாயகர்கள் பலரின் வேடத்தில் நடிக்க நடிகர்களை தேர்ந்தெடுத்துவிட்ட ராஜசேகரனுக்கு அண்ணா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதில் பெரும் குழப்பமாகி விட்டதாம்.

பலரையும் பார்த்த அவருக்கு திருப்தி ஏற்படவில்லையாம். இந்த நிலையில்தான் இயக்குநர் ஸ்டான்லியின் முகம்அவருக்கு ஞாபகம் வந்தது. அவரது முகம் அண்ணாவின் முகத்திற்கு பொருத்தமாக அமையும் என்று யோசித்தஅவர் ஸ்டான்லியிடம் பேசியுள்ளார்.

இந்த வாய்ப்பை எதிர்பாராத ஸ்டான்லி மகிழ்ச்சியடைந்து உடனடியாக ஓ.கே. சொல்லி விட்டாராம். அப்புறம்என்ன சட்டுப்புட்டென்று மேக்கப் சோதனை நடத்தியுள்ளனர். அதில் ராஜசேகரனுக்கு திருப்தி ஏற்படவே நீங்கள்எனது அண்ணா என்று கூறி விட்டார்.

அத்தோடு நில்லாமல் அண்ணா சம்பந்தப்பட்ட காட்சிகளையும் எடுத்து முடித்து விட்டாராம். இந்த வாய்ப்புகுறித்து ஸ்டான்லி சந்தோஷமாக இருக்கிறார். பெரியார் என்ற மிகப் பெரிய சீர்திருத்தவாதியின் வாழ்க்கைவரலாற்றை சித்தரிக்கும் படத்தில் நானும் நடித்துள்ளேன் என்பது ஒரு சந்தோஷம்.

அண்ணா என்ற இன்னொரு மிகப் பெரிய மனிதரின் வேடத்தில் நான் நடித்துள்ளேன் என்பது எனது இரண்டாவதுசந்தோஷம். இப்படத்தில் பெரியார் கேரக்டரை இயக்குநர் ராஜசேகரன் மிக அருமையாக சித்தரித்துள்ளார் என்றுசந்தோஷமாக கூறுகிறார்.

புதுப்பேட்டையிலிருந்து சரவணன் என்ற படம் தான் ஸ்டான்லியின் முதல் படம். தனுஷ் நடித்த இப்படம் பெரியஅளவில் ஓடவில்லை. இருப்பினும் ஸ்டான்லியின் மெர்க்குரிப் பூக்கள் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. அதேபோல ஸ்டான்லி இயக்கத்தில் உருவாகியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையும் மிகப் பெரியஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது அண்ணா படத்தில் நடித்து திரையுலக சரித்திரத்தில் முக்கிய இடம் பெறப் போகும் பெரியார் படத்தில்ஸ்டான்லியும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil