»   »  தொடங்கியது தமிழ் சினிமா -75

தொடங்கியது தமிழ் சினிமா -75

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் சினிமாவின் பவள விழா சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் பவள விழாவையொட்டி அதை பிரமாண்டமாக கொண்டாட தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நடிகர் சங்கத்துடன், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் உள்ளிட்டவையும் கை கோர்த்துள்ளன.

பவள விழாவின் தொடக்க விழா சிங்கப்பூரில் உள்ள கோல்டன் வில்லேஜ் சினிமாஸ் அரங்கில் நேற்று மாலை தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் விழாவைத் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவின் சிறப்பம்சமாக எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் படம் திரையிடப்பட்டது. இதுதவிர வீரபாண்டிய கட்டபொம்மன், ரத்தக் கண்ணீர், ஒரு தலை ராகம், 16 வயதினிலே, சூரிய வம்சம், சிவாஜி ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.

ஆகஸ்ட் 11ம் தேதி டாக்டர் சாலமன் பாப்பையா தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில், விஜய டி.ராஜேந்தர், சத்யராஜ், பாரதிராஜா, ஸ்ரீபிரியா, குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் மெகா ஸ்டார் நைட் நிழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து நவம்பரில் மலேசியாவிலும், டிசம்பரில் அமெரிக்காவிலும் ஸ்டார் நைட் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஜனவரி மாதம் சென்னையில் நிறைவு விழா நடைபெறுகிறது. இது ஒரு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற ரீதியிலான விழாவாக இல்லாமல் தமிழ் சினிமாவின் 75 ஆண்டு கால வரலாற்றைப் பதிவு செய்யும் நிகழ்ச்சியாக அமையும் என விழா ஒருங்கிணைப்பாளரான ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவன தலைவரான நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil