twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்ஸ்

    By Staff
    |

    சினிமா லைட்மேன் சங்க நல நிதிக்காக வரும் 16ம் தேதி நடிகர் கமலஹாசன் தலைமையில் திரைப்பட கலை விழாநடைபெறவுள்ளது.

    திரைப்பட லைட் மேன்களின் நல நிதிக்காக தமிழ்த் திரையுலகினர் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

    வரும் 16ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தின் உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தக் கலை விழா நடக்கிறது.

    நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அர்ஜூன், பிரசாந்த், மாதவன், சிலம்பரசன், விவேக்,ஷாம், அருண்குமார், பிரபு தேவா உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    மேலும் நடிகைகள் சிம்ரன், ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயானி, மும்தாஜ், ரோஜா, கிரண், ஷெரீன்உள்ளிட்ட நாயகிகளும் இதில் பங்கேற்கிறார்கள்.

    இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்த்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால்அவரிடமிருந்து இதுவரை பதில் இல்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியை ஜெயா டி.வி. நேரடியாக ஒளிபரப்பவுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்கம் மற்றும் "பெப்சி"(தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு) ஆகிய அமைப்புகள் இணைந்து இதை நடத்தவுள்ளன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X