என்னது தனுஷ் இப்படிப்பட்டவரா? ....தந்தை கஸ்தூரி ராஜா சொன்ன வியப்பான தகவல்
சென்னை: நடிகர் தனுஷ் இப்பொழுது இந்திய அளவில் அசுர நடிகராக உருவெடுத்து உள்ளார்
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போவில் வெளியாகும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது
Recommended Video
இந்த நிலையில் தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரிராஜா தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் இப்பவும் தனுஷுக்கு சினிமா லைஃப்ல ஈடுபாடு கிடையாது என ஓபனாக பேசியுள்ளார்.

கடின உழைப்பின் மூலம்
மிகப் பெரிய திரை குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து இருந்தாலும் தனது தன்னுடைய விடா முயற்சியின் மூலமும் கடின உழைப்பின் மூலம் இப்போது தமிழ் சினிமாவில் அனைவரும் வியந்து பார்க்கும் மிகச் சிறந்த நடிகராக உயர்ந்துள்ளார் நடிகர் தனுஷ். தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது . சர்வதேச அளவில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி
ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்கள் தனுஷுக்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை குவித்தது. தனுஷ் இதுவரை பல இயக்குனருடன் இணைந்து பணியாற்றி இருந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் இணையும் திரைப்படங்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது அடுத்ததாக வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வடசென்னை 2 உருவாகி வருகிறது.

இரட்டை வேடத்தில்
தனுஷ் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவரும் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் யாரடி மோகினி மோகினி பட இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருசிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

வேறு வழியில்லாமல் தனுஷ் ஹீரோவாக
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா பேசுகையில் துள்ளுவதோ இளமை படம் எடுக்கும் போது தனுஷ் ஸ்கூல் படித்துக்கொண்டிருந்தார் அப்பொழுது அந்த படத்திற்கு கிட்டத்தட்ட 100 நபர்களுக்கு மேல் ஆடிஷன் வைக்கப்பட்டது. கடைசியாக தெலுங்கு நடிகர் உதய்கிரண் நடிப்பதாக இருந்தது. கடைசியில் அவரும் நடிக்க முடியாமல் போனதால் வேறு வழியில்லாமல் தனுஷ் ஹீரோவாக நடித்தார்.

சினிமால ஈடுபாடே கிடையாது
தனுஷுக்கு சினிமாவில் நடிப்பதில் ஈடுபாடேகிடையாது. முதல் ஐந்து படத்திலும் வேண்டா வெறுப்பாக மட்டுமே நடித்தார். இப்பொழுது இந்திய அளவில் அனைவரும் புகழும் மிகச் சிறந்த நடிகராக தனுஷ் உயர்ந்திருந்தாலும் இப்பொழுதும் சினிமா லைஃப்ல ஈடுபாடு கிடையாது என இயக்குனர் கஸ்தூரிராஜா ஓபனாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











