»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

"திருடிய இதயத்தை" படத்தில் "மச்சி" சுபாவும், ரோஹனும் சேர்ந்து நடித்துள்ள பெட்ரூம் காட்சி தணிக்கை அதிகாரிகளை தடம் புரளவைக்கப் போவதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

தமிழ் சினிமாக்காரர்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு. தணிக்கை அதிகாரிகளை சும்மா இருக்க விடுவதே இல்லை. குண்டக்க மண்டக்கஎன்று காட்சிகளை வைத்து விட்டு தணிக்கை ஆசாமிகளை கத்திரிக்கோலும், கையுமாக அலைய விடுவதே இவர்களுக்கு வாடிக்கையாகிப்போய் விட்டது.

அந்த வகையில் தணிக்கைக்காரர்களின் கத்திக்கு சரியான வேலை வைக்கும் வகையில் ஒரு காட்சி திருடிய இதயத்தை படத்தில் இடம்பெற்றுள்ளதாம். இதில் ஹீரோவாக நடிக்கும் ரோஹனும், ஹீரோயின் சுபாவும் (மச்சி படத்தில் வந்தாரே அவர்தான்) ஒரு பெட்ரூம்காட்சியில் புகுந்து விளையாடியுள்ளார்களாம்.

இந்தக் காட்சியை சென்னையை விட்டு ஒதுக்குப்புறத்தில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பங்களாவில் வைத்து ஷூட்செய்தார்களாம். கொஞ்சம் கொஞ்சம் பார்த்து, கொஞ்சம் கொஞ்சம் சிரித்து என்று தொடங்கும் பாடல் காட்சி இது. படப்பிடிப்பின்போதுஇயக்குனர், டான்ஸ் மாஸ்டர், ஒளிப்பதிவாளர் தவிர அனைவரையும் வெளியேற்றினார்கள் என்றார் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சுபாவும், ரோஹனும் கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளதைப் பார்த்தால் பாட்டு கொஞ்சம் கூட தணிக்கையிலிருந்து தப்பாது என்றுகூறுகிறார்கள்.

எதற்கும் இருக்கட்டும் என்று அசைவத்தைக் குறைத்தும் சில காட்சிகளை சுட்டு வைத்துள்ளார்களாம்.


படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. 75 சதவீத படத்தை வெறும் 17 நாட்களில் எடுத்து முடித்துவிட்டாராம் இயக்குநர் முரளிகிருஷ்ணா.

பிப்ரவரி 14ம் தேதி அதாவது காதலர் தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். படத்தின் ஒன்லைன் ஸ்டோரி என்னவென்றால்,நட்புக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கிற இரு நண்பர்களைக் காதல் பிரித்து விடுகிறது. இறுதியில் என்னாவனதுஎன்பதுதான் என்பதுதான் கதை.

வழக்கமான முக்கோண காதல் கதை தான் என்றாலும் நான் சொல்லியிருக்கிற விதம் புதுசு. மேலும் காமெடி, சென்டிமெண்ட், டான்ஸ் என்றுபடம் சரி மசாலாவாக வந்திருக்கிறது. அதனால் வெற்றி உறுதி என்கிறார் முரளிகிருஷ்ணா.

17 நாட்களில் எடுக்கப்பட்ட படத்தில தரம் இருக்குமா என்று கேட்டால், காதல் படத்தை உதாரணம் காட்டுகிறார் முரளிகிருஷ்ணா.

சூட்டிங் ஸ்பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நடிகர்களை பயிற்சி எடுக்க வைத்துவிட்டால் சீக்கிரம் படத்தை முடித்து விட முடியும் என்பதற்குகாதல் ஒரு உதாரணம். குறைந்த நாள் படப்பிடிப்பு, லோ பட்ஜெட் என்பதால் காதல் படம் ஓடவில்லையா என்ன என்று கேட்கிறார்.எப்படியோ போட்ட முதலுக்கு நட்டமில்லாமல் ஓடினால் சரிதான்.

பிறகு வாசகர்களின் பொது அறிவுக்காக ஒரு தகவல்!, சுபா தனது வீட்டில் 8 நாய்களை வளர்க்கிறாராம், லொள்.. லொள்..!!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil