Subham X Review: தயாரிப்பாளராக சமந்தாவுக்கு சக்சஸ் கிடைத்ததா?.. ‘சுபம்’ ட்விட்டர் விமர்சனம் இதோ!

ஹைதராபாத்: சமந்தா தயாரித்து கேமியோவாக நடித்துள்ள 'சுபம்' திரைப்படம் இன்று வெளியானது. நடிகை சமந்தா மயோசைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். அதிக வெளிச்சம் பட்டால் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்துவிடுவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் சமந்தா கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முன்பு போல சினிமாவில் தன்னால் நடிக்க முடியவில்லை என்றாலும் நல்ல நல்ல படங்களை தயாரித்து வெளியிட முடியும் என்கிற முடிவில் இந்த படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள 'சுபம்' படம் சமந்தாவுக்கு லாபத்தைக் கொடுக்குமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Subham X Review in Tamil Samantha s first production movie gets positive reviews

சுபம் படத்தை பார்த்த எக்ஸ் தள வாசிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்களை தற்போது இங்கே காணலாம் வாங்க..

சமந்தா தயாரிப்பில் சுபம்: பழைய படங்கள் எல்லாம் முடியும் போது கடைசியாக 'சுபம்' போட்டுத்தான் முடிப்பார்கள். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தின் இறுதியிலும் சுபம் போட்டு முடித்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்நிலையில், சமந்தா தனது படத்தின் டைட்டிலுக்கே அப்படியொரு டைட்டிலை வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பேயோட்டியாக சமந்தா: சமீபத்தில் பேயுடன் சண்டையுடன் சாமியாராக நடிகை தமன்னா ஓடேலா 2 படத்தில் நடித்திருந்தார். அந்த படம் திரையரங்குகளில் ஓடாத நிலையில், ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை சமந்தா சுபம் படத்தில் பேயோட்டியாக கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் காமெடி ரகளை என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சுமார் தான்: சுபம் படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என்றும் நெட்டிசன்கள் அந்தளவுக்கு எல்லாம் படத்தில் ஒன்றுமே இல்லை சுமாரான படம் தான் இந்த சுபம் என்றும் சோஷியல் மீடியாவில் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக சமந்தா வரும் சீனெல்லாம் சரியாக வொர்க்கவுட் ஆகவில்லை என கமெண்ட் அடித்துள்ளனர்.

சம்மர் என்டர்டெயினர்:: அடுத்த வாரம் தமிழில் சம்மர் என்டர்டெயினர் காமெடி பேய் படமாக சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாக உள்ள நிலையில், இப்பவே சமந்தாவின் சுபம் அந்த வேலையை பார்த்துள்ளதாக நெட்டிசன்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையும் தூவி வருகின்றனர். மல்டி பிளக்ஸ் தியேட்டர்களான பிவிஆர் தியேட்டர்களில் எல்லாம் நைட் ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் படுவேகமாக விற்றுத் தீர்ந்து வருவதகாவும் கூறுகின்றனர்.

சமந்தாவுக்கு சக்சஸ் கிடைக்குமா?: நடிகை சமந்தாவுக்கு திருமண வாழ்க்கையில் பெரிய இடியே விழுந்துவிட்டது. காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நாக சைதன்யா சமந்தாவை விட்டு விட்டு சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துக் கொண்டார். உடல்நலக்குறைவு காரணமாக ஒதுங்கியிருந்த சமந்தா தயாரிப்பு பணிகளில் பிசியாக ஈடுபட்டு வரும் நிலையில், கண்டிப்பாக அவருடைய முதல் படமான சுபம் படம் சமந்தாவுக்கு நிச்சயம் ஓரளவுக்கு வசூலை அள்ளி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை சமந்தாவும் சீக்கிரமே 2வது திருமணத்தை செய்துக் கொண்டு சந்தோஷமான வாழ்க்கையில் வாழ வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X