twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    140 தமிழ்ப் படங்களுக்கு மானியம்: ராம.நாராயணன் அறிவிப்பு

    By Sudha
    |

    Rama Narayanan
    சென்னை: 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஆண்டுக்கு 35 படங்கள் வீதம் மொத்தம் 140 படங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:

    கடந்த 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளுக்கான மானிய தொகை வழங்கி, தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் திரையுலகினரின் துன்பங்களை துடைத்து, இன்பம் சேர்க்கும் விதமாக, கடந்த 2007, 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு தமிழக அரசின் மானிய தொகைக்கான விண்ணப்பம் அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

    அதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான விண்ணப்பத்தை சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.''

    இவ்வாறு அந்த அறிக்கையில் ராம.நாராயணன் கூறியிருக்கிறார்.

    English summary
    Tamil Film Producers Council President Rama Narayanan announced subsidy scheme to Tamil films released in the year 2007 to 2010. Producers those want to apply for the same may get the application forms from the TFPC office at Film Chamber premises.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X