கோணிப் பை உள்ளே என்ன உடை என்று ஆவலாக பார்த்த அதர்வாவிற்கு பாலா படத்தில் சுதா கொங்காரா கொடுத்த உடை

சென்னை: எட்டுத் தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குருதி ஆட்டம்.

Recommended Video

Sudha Kongara Prasad | நம்பவே முடியல| Sudha kongara speech about National award |*Kollywood

குருதி ஆட்டம் திரைப்படம் எட்டு தோட்டாக்கள் அளவிற்கு பெரிதும் பேசப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் புரோமோஷனின்போது இயக்குநர் பாலா பற்றியும் பரதேசி படத்தை பற்றியும் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் அதர்வா.

 பரதேசி

பரதேசி

தன்னுடைய மூன்றாவது படத்திலேயே இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் அதர்வா. அதர்வாவை வைத்து படம் பண்ண வேண்டியது என்னுடைய கடமை என்று பாலா அப்போது கூறியிருந்தார். காரணம் பாலா உதவி இயக்குநராக இருந்தபோது அதர்வாவின் தந்தையும் நடிகருமான முரளி பாலாவிற்கு பல உதவிகளை செய்துள்ளாராம். அந்த நன்றிக் கடனுக்காகவே பரதேசியில் அதர்வாவை ஹீரோவாக்கினார்.

 சுதா கொங்காரா

சுதா கொங்காரா

பரதேசி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே அதனுடைய மேக்கிங் வீடியோ வெளியாகி பாலா ஒரு கொடூரமானவர் போல சித்தரிக்கப்பட்டார். காரணம் அனைவரையும் கம்பால் அடித்து காலால் எட்டி உதைத்து படத்தை இயக்குவது போல அந்த மேக்கிங் வீடியோ இருந்தது. பின்னர் அது அனைத்தும் நடிப்பு சொல்லிக் கொடுத்த விதம் என்று படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே துரோகி என்கிற படத்தை இயக்கியிருந்தாலும் பரதேசி திரைப்படத்தில் தற்சமயம் முன்னணி இயக்குநராக இருக்கும் சுதா கொங்காரா இணை இயக்குனராக பணியாற்றினார்.

 இணையதளத்தில் கூட இல்லை

இணையதளத்தில் கூட இல்லை

முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் அதர்வாவை அழைத்து என்னுடைய அடுத்த படத்தில் நீதான் கதாநாயகன் என்று கூறியிருக்கிறார் பாலா. அதன் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு நாள் அதர்வாவை அழைத்து நாளை உனக்கு லுக் டெஸ்ட் இருக்கிறது என்று கூறிவிட்டாராம். அன்று இரவு அதர்வா மிகுந்த ஆர்வத்துடன் என்ன மாதிரியான கெட்டப் இருக்கப் போகிறது என்று இணையதளம் முழுக்க பலவிதமான ஹேர் ஸ்டைல்களை பார்த்து இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று எதிர்பார்ப்பில் இருந்திருக்கிறார்.

 கோணிப் பை

கோணிப் பை

மறுநாள் பாலா அலுவலகத்தில் அதர்வாவிற்கு முடி வெட்டியுள்ளனர். முடிவெட்டி முடிக்கும் வரையில் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்கவில்லையாம். பின்னர் உடை எடுத்து வருவதாக கூறி ஒரு சாக்கு பையை எடுத்து வந்தார்கள். உள்ளே ராஜா உடை போல ஏதேனும் இருக்குமோ என்று ஆர்வமுடன் பார்த்த அதர்வாவிற்கு அந்த கோணிப்பை உள்ளே இன்னொரு கோணிப்பை எடுத்துக் கொடுத்து இதுதான் உடை என்று கொடுத்தார்களாம். பின்னர் சகதி நிறைந்த ஒரு இடத்தில் அமர வைத்து அந்தச் சகதியை உடம்பில் பூசச் சொல்லி புகைப்படம் எடுத்துள்ளனர். முழுக்க முழுக்க சுதா கொங்காராதான் அறிவுறித்தியுள்ளார். பின்னர் அந்த ஃபோட்டோவை காண்பித்து இந்த தோற்றத்தில் தான் நீ படத்தில் இருக்கப் போகிறாய் என்று கூறினாராம் பாலா. அப்போதுதான் அதர்வாவிற்கு தோன்றியதாம் இணையதளத்தில் கூட இல்லாத ஒரு ஹேர் ஸ்டைலை தனக்கு கொடுத்திருக்கிறார் என்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X