»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil
அது படத்தில் பேய் காரெக்டரில் நடித்த சுகாவுக்கு தேவதை புரமோஷன் கிடைத்துவிட்டது. அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிப்பது ஜூனியர் செந்தில், அதாவது காமெடி நடிகர் செந்திலின் மகன் நவீன்.

முதல் படத்தில் பேயாக நடித்தாலும், அழகிய ராட்சசியாகவே இருந்தார் சுகா. அந்தப் படத்தைத் தொடர்ந்து கருணாநிதியின் கதைவசனத்தில் உருவாகும் மண்ணின் மைந்தன் படத்திலும் நடித்து வருகிறார். அதில் செகண்ட் ஹீரோயின் ரோல் தான்.

இந் நிலையில் தான் நவீனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

கவுண்டமணியுடன் சேர்ந்து காமெடியில் கலக்கிய செந்திலின் மகன், அப்பா வழியில் காமெடியனாகாமல், ஹீரோவாகி விட்டார்.

தமிழ் சினிமாவின் லாரல்-ஹார்ஐயாக விளங்கிய கவுண்டமணி-செந்தில் ஜோடி கிட்டத்தட்ட ரிடையர்மெண்ட் ஏஜை எட்டிவிட்டது.செந்திலுக்காவது பெயருக்கு ஏதாவது வேடங்கள் கிடைக்கின்றன. கவுண்டமணியோ ரூ. 25 லட்சம் குடு, ரூ. 50 லட்சம் என்று இன்னும்பழைய முறுக்கிலேயே இருப்பதால் கண்டுகொள்ள ஆள் இல்லாமல் திரிகிறார்.

பழைய படங்களை விசிடியில் பார்ப்பது, டிரைவ்-இன் ஹோட்டலுக்கு வந்து மணிக்கணக்கில் யாரையாவது பிளேடு போடுவது என்றுநகர்கின்றன அவரது அன்றாட நாட்கள்.

காமெடியனாக நடித்த செந்திலுக்கு தனது பிள்ளைகளை சினிமாவுக்குக் கொண்டு வருவதில் விருப்பமே இல்லையாம். ஏகப்பட்டடொனேசன் கொடுத்து பல் டாக்டர் சீட்டை வாங்கிக் கொடுத்து மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

ஆனால், ஹேமச்சந்திர பிரபு என்ற இயற்பெயர் கொண்ட நவீனுக்கு சினிமாவில் பல் பிடித்துப் பார்க்கவே ஆசையாம்.

இதனால் அப்பாவை அனத்தி எடுத்து சம்மதிக்க வைத்து உன்னை எனக்குப் புடிச்சிருக்கு என்ற படம் மூலம் ஹீரோவாகிறார். சும்மா ஹீரோஆக முடியுமா? நடனம், ஃபைட் எல்லாம் கற்றுக் கொண்டுள்ளாராம். நடிக்க கற்றுக் கொண்டரா என்று தெரியவில்லை.

இந்தர் படத்தில் செந்தில் நடிக்கவில்லையாம். மகன் நடிப்பதை அருகே இருந்து பார்த்து ரசிக்கப் போகிறாராம்.

நவீனுக்கு ஜோடியாக வரும் சுகாவுக்கு ஹீரோயின் சான்ஸ் என்பதால் இது சுகானுபவம். அது படத்தில் பேயாக வந்தபோதே தாராளம்காட்டி பேயையை ரசிக்க வைத்தார். ஹீரோயினாகிவிட்டதால் கவர்ச்சிக்கு தடா போடாமல் நடிக்கிறார்.

நவீன் தவிர முன்னா என்பவரும் இன்னொரு ஹீரோவாக இதில் நடிக்கிறார். இவர் அந்த கால மலையாள குஜால் நடிகை ஜெயபாரதியின்தங்கை மகன். இவருக்கு ஜோடியாக மும்பை மாடல் ஒருவர் அறிமுகமாகிறார்.

கொஞ்சம் காலம் காணாமல் போயிருந்த இசையமைப்பாளர் சிற்பியைத் தேடிப்பிடித்து இந்தப் படத்திற்கு இசையமைக்க வைத்துள்ளார்கள்.

செந்திலின் மகன் ஹீரோவாகிவிட்ட நிலையில், தனது மகன் ரகுவையும் ஹீரோவாக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளார்இயக்குனர் கம் நடிகர் மணிவண்ணன். அதே போல மகனுக்கு சான்ஸ் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் நடிகர் கார்த்திக்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil