»   »  கோபிகாவின் அம்மா நிரோஷா!

கோபிகாவின் அம்மா நிரோஷா!

Subscribe to Oneindia Tamil

இளமை கொஞ்சிய சுகன்யாவும், செழுமை நிரம்பிய நிரோஷாவும் இப்போது அம்மாநடிகைகளாகி விட்டனர். ஆனால் தமிழில் அம்மா வேடம் கட்ட வெட்கப்பட்டுதெலுங்கில் அம்மாவாகி அசத்தி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் ஓஹோவென இருந்தவர் சுகன்யா. ரஜினியைத் தவிர மற்ற அனைத்துமுன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு அசத்தியவர். கமலுடன் 2 படங்களில்நடித்துள்ளார். நம்பர் ஒன் இடத்தில் பல காலம் இருந்த சுகன்யா பின்னர்வாய்ப்பிழந்தார். முன்னாள் அமைச்சர் கண்ணப்பனுடன் கிசுகிசுவிலும் சிக்கினார்.

அவரைப் போலவே லீடிங்கில் இருந்த இன்னொரு நடிகை நிரோஷா. இவரதுஉதட்டழகையும், முகவெட்டையும் வைத்து சின்ன சில்க் என்று செல்லமாகஅழைக்கப்பட்டவர்.

ராதிகாவின் தங்கச்சியான நிரோஷாவும் தமிழில் ஒரு ரவுண்டு அடித்தவர். இவருக்கும்போகப் போக வாய்ப்புகள் குறைந்து,செகண்ட் ஹீரோயினாக பதவி இறக்கம் கண்டார்.அப்படியே காணாமலும் போனார். நடிகர் ராம்கியை ரகசியமாக மணந்து கொண்டுஅப்படியே செட்டிலாகி விட்டார்.

இடையில் அக்கா தயாரித்த சின்னப் பாப்பா, பெரிய பாப்பா தொலைக்காட்சித்தொடரில் கலக்கினார். மேலும் சில தொடர்களிலும் தலையைக் காட்டினார்.அவ்வப்போது சினிமாவிலும் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வந்தார்.

இந்த இருவரும் இப்போது அம்மா நடிகைகளாகி விட்டனர். தமிழில் அல்ல,தெலுங்கில். தமிழில் அம்மா வேடத்தில் நடிக்க வெட்கமாக இருப்பதால், கமுக்கமாகதெலுங்கில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்கள் இருவரும்.

கோபிகாவின் அம்மாவாக ஒரு படத்தில் நிரோஷா நடித்து வருகிறாராம். இதேபோலஷாலினியின் அண்ணன் ரிச்சர்டின் அம்மாவாக சுகன்யா ஒரு படத்தில் நடிக்கிறார்.தமிழில் ரிச்சர்டாகவும், தெலுங்கில் ரிஷி என்ற பெயரிலும் நடித்து வருகிறார் ரிச்சர்ட்.

இவர்களைப் போலவே ரிட்டயர்ட் ஆன மேலும் சில முன்னாள் ஹீரோயின்களும்அம்மா வேடத்திற்குத் தாவலாமா என அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்களாம்.

ஏற்கனவே அம்பிகா அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். மற்ற முன்னாள்ஹீரோயின்கள் சிலரும் விரைவில் அம்மா ஆவார்கள் எனத் தெரிகிறது.

வாங்கம்மா, வாங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil