»   »  விஜய்காந்த்தை ஆதரிக்கும் சுகன்யா!

விஜய்காந்த்தை ஆதரிக்கும் சுகன்யா!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை சுகன்யா, திடீரென்று விஜயகாந்த் போன்ற நல்ல அரசியல்வாதிகளை வரவேற்போம் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் சுகன்யா பேசுகையில்,

நான் நடித்த ஆனந்தம் டிவி தொடர் 950 பகுதிகளைத் தாண்டி விட்டது. இந்தத் தொடர் துவங்கி சுமார் 4 வருடங்கள் ஆகின்றன. இதன் வெற்றிக்கு காரணம் தயாரிப்பாளரும், இயக்குனரும் அந்த டீம் ஒர்க் தான் என்று சொல்வேன்.

என்னைப் பொறுத்த வரையில் சின்னத் திரைக்கும், பெரியத் திரைக்கும் பெரிய வித்தியாசம், வேறுபாடு எல்லாம் கிடையாது. சின்னத் திரையிலும் அழுகின்றோம், சிரிக்கிறோம். அதே போன்று தான் பெரிய திரையிலும் அழுகின்றோம், சிரிக்கிறோம்.

வட நாட்டை சேர்ந்த பல நடிகைகள் நடிக்க வந்துள்ளனர். நடிப்பது தவறு கிடையாது. திறமை இருந்தால் யார் வேண்டும் என்றாலும் நடிக்கலாம், வெற்றி பெறலாம்.

விஜயகாந்த் அரசியலில் நன்கு வளர்ந்துள்ளார். நல்ல அரசியல்வாதிகள் வந்தால் வரவேற்போம். தமிழில் ஆயுதம் செய்வோம் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்து வருகிறேன் என்றார்.

சுகன்யா கண்ணுக்கு சின்ன கவுண்டர் மட்டும் தான் நல்லவர் போலும்.

Read more about: suganya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil