»   »  ஒரு நாள் கூலிக்கு மாறினார் சுகன்யா!

ஒரு நாள் கூலிக்கு மாறினார் சுகன்யா!

Subscribe to Oneindia Tamil

முன்னாள் குறும்புக் கன்னி சுகன்யா, கல்யாணமான வேகத்தில் விவாகரத்தும் ஆன பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இப்போதுடிவி சீரியல்களில் பிசியாக உள்ளார்.

புது நெல்லு புது நாத்து மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுகன்யா, முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்துகோலிவுட்டில் பெரிய ரவுண்டு வந்தவர். கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என முன்னணிப் பெருசுகளுடன் ஜோடிபோட்டுள்ள சுகன்யாவுக்கு, அதிரடி சின்னக் குட்டிகளின் வரவால் வாய்ப்பு பறிபோனது.

முன்னணி நடிகையாக இருந்தபோதே பல சர்ச்சைகளில் சிக்கியவர் சுகன்யா. சத்யராஜுடன் முன்பு கிசுகிசுக்கப்பட்டார். பின்னர்கண்ணான தமிழக அமைச்சர் ஒருவருடன் பயங்கரமாக இணைத்துப் பேசப்பட்டார். சுகன்யாவின் தொடர்பால் அந்த அமைச்சரின்மனைவி பிரிந்து போனதாகக் கூட பேசப்பட்டது.

இப்படி பல விதத்தில் படு பிசியாகவும், பரபரப்பாகவும் இருந்து வந்த சுகன்யா, வாய்ப்புகள் குறைந்ததால் கல்யாணம் கட்டிக்கொண்டு போனார். ஆனால் போன வேகத்திலேயே திரும்பி வந்தார். விவாகரத்தும் ஆனது. இப்போது சுதந்திரமாக, தனி மரமாகமீண்டும் வெள்ளித் திரைக்கு திரும்பியுள்ளார்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெள்ளித் திரை வாய்ப்புகள் வராததால், சின்னத் திரைப்பக்கம் தனது கவனத்தை திசைதிருப்பியுள்ளார். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. தமிழில் ஒரு மெகா தொடரில் நடித்து வரும் சுகன்யா, மலையாளத்திலும்ஒரு சீரியலில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் தலை காட்டி வருகிறார்.

சின்னத் திரையில் தற்போது படு பிசியாக இருக்கும் சுகன்யா, இப்போது தினக்கூலி கணக்கில் சம்பளத்தை மாற்றி வசூலில் ஜரூராகஇறங்கி உள்ளார். டிவி சீரியல்களில் நடிப்பதாக இருந்தால் ஒரு நாள் சம்பளம் ரூ. 40,000. அதுவே சினிமாவாக இருந்தால் ஒருநாள் கூலியாக 75,000 ரூபாய் என கறாராக வாங்கி விடுகிறாராம் சுகன்யா.

இதுதவிர இசை ஆல்பம் ஒன்றையும் தயாரித்துள்ளார் சுகன்யா. அதற்கு இசை சுகன்யாவேதானாம். சமீபத்தில் சென்னையில்வைத்து தனது இசை ஆல்பத்தை இவர் வெளியிட்டார். இந்த விழாவில் மறக்காமல் தனது குருநாதர் பாரதிராஜாவைஅழைத்திருந்தார்.

விழாவில் பேசிய சுகன்யா, தனக்கு இசை ஆர்வம் திடீரென ஒரு நாள் மின்னல் அடித்தது போல வந்தது என்று கூறிஅனைவரையும் புல்லரிக்க வைத்தார்.

தனது இசை ஆர்வத்தை அவரே பெரிய அளவில் மெச்சிக் கொண்டு, அடுத்து ஒரு படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்றலட்சியத்தோடு, தன்னை பார்க்க வருபவர்களிடம் எனக்கு யாராவது வாய்ப்பு தந்தால் கோலிவுட்டை கலக்கி விடுவேன் என்றுவேறு பயமுறுத்தி வருகிறாராம்.

Read more about: suganya fixed daily salary

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil