மீண்டும் இயக்கும் சுஹாசினி!

By Staff

இந்திரா என்ற படத்தை இயக்கிய சுஹாசினி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனில் குதிக்கிறார். இம்முறை பிரகாஷ் ராஜின் தயாரிப்பில் புதுப் படத்தை இயக்கவுள்ளார் சுஹாசினி.

மணிரத்தினத்தின் மனைவியும், கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகளுமான சுஹாசினி ஒரு காலத்தில் பிரபல நடிகையாக விளங்கியவர். நடிப்பிலிருந்து ஓய்வு பெறும் வயதை தொட்ட பின்னர் இயக்கத்தில் குதித்தார்.

இந்திரா என்ற படத்தை பத்து வருடங்களுக்கு முன்பு இயக்கி வெளியிட்டார். மணிரத்தினத்தின் அண்ணனான ஜீவிதான் இப்படத்தைத் தயாரித்தார்.

அதன் பின்னர் படங்கள் எதையும் அவர் இயக்கவில்லை. இடையில், டிவி தொடர்களைத் தயாரித்து, நடித்து வந்த சுஹாசினி பின்னர் அதிலிருந்தும் விலகினார். பின்னர் ராஜ் டிவிக்காக ஒரு கேம் ஷோவை நடத்தினார். விரைவில் ஜெயா டிவிக்காக ஒரு கேம் ஷோவை நடத்தவுள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் டைரக்ஷனில் குதிக்கிறார் சுஹாசினி. ரிடையர்ட் ஆன நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்து வரும் பிரகாஷ்ராஜ்தான் சுஹாசினி இயக்கப் போகும் படத்ததைத் தயாரிக்கப் போகிறார்.

ரேவதி, ரோஹினி, ஊர்வசி ஆகியோருக்கு பிரகாஷ் ராஜ் இதற்கு முன்பு இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். ஊர்வசிக்கு நடிக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இப்போது சுஹாசினிக்கு இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.

டூயட் மூவிஸ் சார்பில் தயாரிக்கப்படவுள்ள இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு ரேவதிக்குப் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை அளிக்கவுள்ளார் பிரகாஷ் ராஜ்.

சுஹாசினியின் இந்திரா படம் பெரிய அளவில் ஓடவில்லை. அப்படத்தால் ஜீவிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. சுஹாசினியின் சிந்தனைகள் ரசிகர்களைக் கவரவில்லை.

தமிழ் கிராமங்கள், கலாச்சார வேறுபாடுகளை சரிவர புரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக படத்தை எடுத்ததால் அப்படம் போண்டியானது.

இதனால் கடும் விமர்சனங்களையும் சந்தித்தார். இதனால்தான் அடுத்து படங்களை இயக்கும் முடிவை கைவிட்டு விட்டார் சுஹாசினி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுஹாசினிக்கு இயக்கும் வாய்ப்பைக் கொடுத்து அவரை டைரக்ஷனுக்கு கூட்டி வருகிறார் பிரகாஷ் ராஜ்.

இதற்கு முன்பு மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த பிரியாவை வைத்து மொழி படத்தைக் கொடுத்தார் பிரகாஷ்.

சுஹாசினியின் 2வது இன்னிங்ஸாவது வெற்றி பெறட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X