»   »  தண்டோரா தொண்டக்காரி!

தண்டோரா தொண்டக்காரி!

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஆட்டக்கார நடிகையாக உருமாறி வரும் சுஜா, லீ படத்தில் கும்மாங்குத்துப் பாட்டுக்கு கமகமவெனஆட்டம் போட்டுள்ளார்.

பளிச் பாப்பா சுஜா, கோலிவுட்டில் படு ஜோராக ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். வாத்தியார் படத்தில் அர்ஜூனுடன்சேர்ந்து என்னடி முனியம்மா ரீமிக்ஸ் பாட்டுக்ககு அவர் போட்ட ஆட்டம், பல குத்தாட்ட வாய்ப்புகளை தேடிக்கொடுத்திருக்கிறது.

இதுபோதாதென்று சமீபத்தில் புத்தாண்டுக்கு முதல் நாள் நள்ளிரவில் கிழக்குக் கடற்கரைச் சாலை முந்திரிக்காட்டுக்குள் ஆண் நண்பர்களோடு அவர் போட்ட அல்டாப்பு ஆட்டமும் நல்ல விளம்பரத்தைத் தேடிக்கொடுத்திருக்கிறது.

சுஜாவின் ஆட்டத் திறமையை உணர்ந்த கோலிவுட் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் குத்தாட்டம் போடசுஜாவை மொய்க்க ஆரம்பித்துள்ளனர். அப்படித்தான் லீ படத்திலும் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடசுஜாவை பிடித்துப் போட்டுள்ளனர்.

சமீபத்தில் சுஜாவும், சிபியும் இணைந்து ஆடிய இந்தக் குத்துப்பாட்டை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சுடச்சுட சுட்டனர். கூடவே பிரகாஷ் ராஜையும் இந்தப் பாட்டில் ஆட விட்டுள்ளனர்.

சுஜாவுக்கு இந்தப் பாட்டில் துக்கனியூண்டு டிரஸ்தானாம். அதுவே அதிகம் என்று சுஜாவே அலுத்துக்கொண்டாராம். அந்த அரைகுறை ஆடையில் படு கிறக்கமாக தெரிந்தார் சுஜா.

பாட்டின் முதல் வரியே படு ஜோராக இருக்கிறது.

தண்டோரா தொண்டக்காரி, டமார பேச்சுக்காரி என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலுக்கேற்க சுஜா, குஜால் ஆட்டம்போட, சிபியும், பிரகாஷ் ராஜும் கூட ஆடி ஒத்து ஊதினார்கள்.

படத்தில் கால்பந்து போட்டி ஒன்றின் இடைவெளியில் இந்தப் பாட்டு வருவது போல காட்சி அமைத்துள்ளாராம்இயக்குநர் பிரபு சாலமோன். வழக்கமாக பாட்டுக்களின்போது தம் அடிக்க எழுந்து போகும் ரசிகர்கள், இந்தப்பாட்டின்போது தம் பிடித்து ரசிப்பார்கள் என்று நம்பிக்கையும் தருகிறார் பிரபு.

இம்சிக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்க, அப்புறம் எதுக்கப்பு காரண, காரியம் எல்லாம்!

Read more about: suja in sibis lee

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil