சுஜி பாலாவுக்கு நடந்த திகில் நாம் அடிக்கடி சொல்லுவோமே.. கோலிவுட்டுல அப்படி நடக்குது இப்படி நடக்குது என்று அரசல் புரசல் விஷயங்களை.. அதைஒரு நடிகையே வெளிப்படையாகப் போட்டு உடைத்திருக்கிறார்.கோடம்பாக்கத்தில் உப்புமா கம்பெனிகளுக்கு பஞ்சமே கிடையாது, எல்லா காலத்திலும். ஒரு வீடோ அல்லது ஒரு ரூமையோவாடகைக்குப் பிடித்து சினிமா கம்பெனி என்று போர்டை மாட்டி, அதுக்கு ஒரு மாலையை மாட்டிவிட்டு கமுக்கமாகஅமர்ந்திருப்பார்கள்.அவர்களிடம் வந்து சிக்கும் டைரக்டர்கள், நடிகர்கள், நடிகைகளை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படியேல்லாம்மிஸ் யூஸ் செய்துவிடுவார்கள். நடிகர் ஆசையோடு யாராவது மாட்டினால் பணம் கறந்து கறந்தே காய வைத்துவிடுவார்கள்.நடிகை கனவோடு வருபவர்களை, ஏமாந்தவர்களை மட்டும், எல்லா வகைகளிலும் சீரழிப்பார்கள். கையை வைக்கமுடியாவிட்டால் அஜால் குஜால் போஸில் ஸ்டில்களையாவது எடுத்துவிட்டுத் தான் விடுவார்கள். அதை அந்த மாதிரிபத்திரிக்கைகளின் நடுப் பக்கத்துக்கு நல்ல காசுக்கு விற்றுவிடுவார்கள்.மொத்தத்தில் இந்த உப்புமா கம்பெனிகள் படம் தயாரிப்பது என்பது எப்போதாவது அபூர்வமாக நடந்தால் உண்டு.இப்படிப்பட்ட கம்பெனியில் மாட்டித் தப்பி வந்திருக்கிறார் நடிகை சுஜிபாலா.பாண்டியராஜனின் கலாட்டா கணபதி படத்தில் அவருக்கு தங்கச்சி, கிச்சா வயசு 16 படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து,சந்திரமுகியில் நாசரின் இளைய மகளாக வேஷம் போட்டு ஹீரோயின் ஆனவர் சுஜிபாலா. பூர்வீகம் கேரளாவைச் சேர்ந்தவரானசுஜி இப்போது டான் சேரா, வஞ்சகன், சூர்யா ஆகிய படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார்.கூடவே செகண்ட் ஹீரோயின், குத்துப் பாட்டு என்று வந்தாலும் அள்ளிப் போட்டுக் கொள்கிறார்.இப்படிப்பட்ட சுஜிக்குத் தான் ஒரு உப்புமா கம்பெனியில் ரகளையான அனுபவம் நடந்திருக்கிறது. அவரே சொல்வதைக்கேட்போம்,செகண்ட் ஹீரோயினா நடிக்க ஒரு படத்துல கூப்பிட்டாங்க. கேரக்டர், சம்பளத்தைப் பேசிட்டு நானும் போனேன். கொஞ்சமேகொஞ்சமாக ஒரு டிரஸ்ஸைக் கொடுத்து போடச் சொன்னார்கள். தயக்கமாக இருந்தாலும் அதைப் போட்டேன்.ஆனா, அவுங்க என்னை படம் புடிச்ச ஆங்கிள், காட்டச் சொன்ன கிளாமர் ரொம்ப வல்கரா இருந்தது. இதனால்அப்படியெல்லாம் படம் எடுக்க வேண்டாம்னு சொன்னேன். ஆனா, டிஸ்ட்ரிபீயூட்டர்களுக்குக் காட்டத்தான் என்று சொல்லி படம்எடுத்தார்கள்.அப்புறம் பார்த்தால் அந்தப் படங்களை பூஜை இன்விடேசன்லேயே போட்டுட்டாங்க. எனக்கு பயங்கர கோபம். அந்தப்படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.நான் கிளாமர நடிக்க ரெடி தான். ஆனால் ஒரு அளவு வேண்டாமா என்று கோபத்துடன் சொல்லி முடித்தார் சுஜி பாலா.சுஜிக்கே கோபம் வரும் அளவுக்கு என்றால் எந்தெந்த ஆங்கிளில் படமெடுத்திருப்பார்கள் என்பதை யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அதில் சுஜி நடித்திருந்தால் இன்னொரு ஷகீலாவாக்கியிருப்பார்கள் போலிருக்கிறது.அனாமிகா புகழ் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் மகன் ஹீரோவாகியிருக்கும் சூர்யா என்ற படத்தில் ஹீரோயினாகநடிக்கும் சுஜி அப்படியே அடுத்தாக பவித்ரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க புக் ஆகியிருக்கிறார்.ஜாகுவார் தங்கம் தனது மகனுக்காக படமெடுக்க நடத்திய சினிமா பூஜையில் ஏராளமான நாடார் இனப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தங்களது சமூகத்தைச் சேர்ந்த தங்கத்தை வாழ்த்திவிட்டுப் போனது குறிப்பிடத்தக்கது.

By Staff

நாம் அடிக்கடி சொல்லுவோமே.. கோலிவுட்டுல அப்படி நடக்குது இப்படி நடக்குது என்று அரசல் புரசல் விஷயங்களை.. அதைஒரு நடிகையே வெளிப்படையாகப் போட்டு உடைத்திருக்கிறார்.

கோடம்பாக்கத்தில் உப்புமா கம்பெனிகளுக்கு பஞ்சமே கிடையாது, எல்லா காலத்திலும். ஒரு வீடோ அல்லது ஒரு ரூமையோவாடகைக்குப் பிடித்து சினிமா கம்பெனி என்று போர்டை மாட்டி, அதுக்கு ஒரு மாலையை மாட்டிவிட்டு கமுக்கமாகஅமர்ந்திருப்பார்கள்.

அவர்களிடம் வந்து சிக்கும் டைரக்டர்கள், நடிகர்கள், நடிகைகளை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படியேல்லாம்மிஸ் யூஸ் செய்துவிடுவார்கள். நடிகர் ஆசையோடு யாராவது மாட்டினால் பணம் கறந்து கறந்தே காய வைத்துவிடுவார்கள்.

நடிகை கனவோடு வருபவர்களை, ஏமாந்தவர்களை மட்டும், எல்லா வகைகளிலும் சீரழிப்பார்கள். கையை வைக்கமுடியாவிட்டால் அஜால் குஜால் போஸில் ஸ்டில்களையாவது எடுத்துவிட்டுத் தான் விடுவார்கள். அதை அந்த மாதிரிபத்திரிக்கைகளின் நடுப் பக்கத்துக்கு நல்ல காசுக்கு விற்றுவிடுவார்கள்.


மொத்தத்தில் இந்த உப்புமா கம்பெனிகள் படம் தயாரிப்பது என்பது எப்போதாவது அபூர்வமாக நடந்தால் உண்டு.

இப்படிப்பட்ட கம்பெனியில் மாட்டித் தப்பி வந்திருக்கிறார் நடிகை சுஜிபாலா.

பாண்டியராஜனின் கலாட்டா கணபதி படத்தில் அவருக்கு தங்கச்சி, கிச்சா வயசு 16 படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து,சந்திரமுகியில் நாசரின் இளைய மகளாக வேஷம் போட்டு ஹீரோயின் ஆனவர் சுஜிபாலா. பூர்வீகம் கேரளாவைச் சேர்ந்தவரானசுஜி இப்போது டான் சேரா, வஞ்சகன், சூர்யா ஆகிய படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார்.

கூடவே செகண்ட் ஹீரோயின், குத்துப் பாட்டு என்று வந்தாலும் அள்ளிப் போட்டுக் கொள்கிறார்.

இப்படிப்பட்ட சுஜிக்குத் தான் ஒரு உப்புமா கம்பெனியில் ரகளையான அனுபவம் நடந்திருக்கிறது. அவரே சொல்வதைக்கேட்போம்,


செகண்ட் ஹீரோயினா நடிக்க ஒரு படத்துல கூப்பிட்டாங்க. கேரக்டர், சம்பளத்தைப் பேசிட்டு நானும் போனேன். கொஞ்சமேகொஞ்சமாக ஒரு டிரஸ்ஸைக் கொடுத்து போடச் சொன்னார்கள். தயக்கமாக இருந்தாலும் அதைப் போட்டேன்.

ஆனா, அவுங்க என்னை படம் புடிச்ச ஆங்கிள், காட்டச் சொன்ன கிளாமர் ரொம்ப வல்கரா இருந்தது. இதனால்அப்படியெல்லாம் படம் எடுக்க வேண்டாம்னு சொன்னேன். ஆனா, டிஸ்ட்ரிபீயூட்டர்களுக்குக் காட்டத்தான் என்று சொல்லி படம்எடுத்தார்கள்.

அப்புறம் பார்த்தால் அந்தப் படங்களை பூஜை இன்விடேசன்லேயே போட்டுட்டாங்க. எனக்கு பயங்கர கோபம். அந்தப்படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.


நான் கிளாமர நடிக்க ரெடி தான். ஆனால் ஒரு அளவு வேண்டாமா என்று கோபத்துடன் சொல்லி முடித்தார் சுஜி பாலா.

சுஜிக்கே கோபம் வரும் அளவுக்கு என்றால் எந்தெந்த ஆங்கிளில் படமெடுத்திருப்பார்கள் என்பதை யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அதில் சுஜி நடித்திருந்தால் இன்னொரு ஷகீலாவாக்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

அனாமிகா புகழ் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் மகன் ஹீரோவாகியிருக்கும் சூர்யா என்ற படத்தில் ஹீரோயினாகநடிக்கும் சுஜி அப்படியே அடுத்தாக பவித்ரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க புக் ஆகியிருக்கிறார்.

ஜாகுவார் தங்கம் தனது மகனுக்காக படமெடுக்க நடத்திய சினிமா பூஜையில் ஏராளமான நாடார் இனப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தங்களது சமூகத்தைச் சேர்ந்த தங்கத்தை வாழ்த்திவிட்டுப் போனது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X