நடிக்க வந்தார் சுந்தரம்!

By Staff

Dance Master Sundaram
டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் நடிக்க வந்து விட்டார். புதிய படம் ஒன்றில் விஞ்ஞானியாக நடிக்கவிருக்கிறாராம் சுந்தரம்.

அந்தக்காலத்தின் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். காதலிக்க நேரமில்லை படத்தில் மாடி மேல மாடி கட்டி பாடலில் குரூப் டான்ஸர்களில் ஒருவராக ஆடியிருப்பார்.

இவரது புதல்வர்களான பிரபுதேவா, ராஜு சுந்தரம் ஆகியோரும் தந்தை வழியில் பிரபல மாஸ்டர்களாகி சக்கை போடு போட்டனர். தமிழ் திரையுலக டான்ஸுக்கு புதிய வடிவம் கொடுத்தனர்.

அதேபோல இவர்கள் நடிக்கவும் செய்தனர். இப்போது பிரபுதேவாவும், ராஜூ சுந்தரமும் இயக்குநர்களாகவும் மாறி விட்டனர்.

இந்த நிலையில் தந்தை சுந்தரம் நடிக்க வந்துள்ளார். முன்பே பலரும் இவரை நடிக்கக் கேட்டனர். ஆனால் தொடர்ந்து மறுத்து வந்தார் சுந்தரம்.

இருப்பினும் தற்போது பா ர பழனிச்சாமி என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சுந்தரம். இப்படத்தில் விஞ்ஞானியாக வருகிறாராம் சுந்தரம்.

ரசாக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X