For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  70 வயசு ஆனாலும் எனர்ஜி குறையல.. இந்த குதிரை ஓடத்தானே செய்யும்.. ஹேப்பி பர்த்டே சூப்பர்ஸ்டார்!

  |

  சென்னை: உனக்கான கேட் அதுவா திறக்காது நீ தான் அதை திறக்கணும்னு 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் தனக்கு இருந்த தடைகளை கேட்டா நினைச்சு எட்டி உதைச்சு திறந்த ரஜினிகாந்துக்கு அதுக்கு அப்புறம் கேட்டதெல்லாம் கிடைச்சிருக்கு!

  இந்த உலகத்துல முயற்சி செஞ்சா சாதிக்க முடியுங்கறதுக்கு உதாரணமா இருக்காரு ரஜினிகாந்த். சாதாரண கண்டக்டர் சிவாஜி ராவ் சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாற முடியும்னா உங்களாலையும் வாழ்க்கையில ஜெயிக்க முடியும். முயற்சி செஞ்சா அந்த அற்புதம் தானா நடக்கும்.

  69வருடங்களை நிறைவு செய்து 70வது பிறந்த நாளில் ஃபுல் எனர்ஜியோடு 'தலைவர் 168' படத்திற்காகவும் அடுத்த இலக்கிற்காகவும் இந்த குதிரை ஓடிக் கொண்டிருக்கிறது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினி சார்!

  வாழையிலையில் தடல்புடல் விருந்து.. ஜப்பானில் களைக்கட்டிய ரஜினிகாந்த் பிறந்தநாள்! #HBDThalaivar வாழையிலையில் தடல்புடல் விருந்து.. ஜப்பானில் களைக்கட்டிய ரஜினிகாந்த் பிறந்தநாள்! #HBDThalaivar

  ஸ்டைல் சாம்ராட்

  இந்தியாவில் அல்ல உலகத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஸ்டைல் சாம்ராட். சைன் போடுறதுல இருந்து, சிகரெட், சால்வைன்னு ஏன் சும்மா நடந்து வரதுலையும் அத்தனை வெரைட்டி அத்தனை ஸ்டைல் காட்டியிருக்காரு சூப்பர்ஸ்டார்.

  பணிவு

  என்னதான் சூப்பர்ஸ்டார் ஆனாலும், தன்னைவிட பெரியவர்களை பார்த்தால், இந்த வயசுலையும் கொஞ்சமும் தயங்காது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் பணிவு நிறைஞ்ச மனசுக்கு சொந்தக்காரர் ரஜினி. அண்மையில் நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் பிதாமகர் அமிதாப் பச்சனை பார்த்த ரஜினிகாந்த், அவர் காலில் விழுந்து ஆசி பெற்ற நிகழ்வு, பல இளைஞர்களுக்கு பாடமாக அமைந்திருக்கிறது.

  நட்பு

  தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் எப்படி இப்படி நட்புடன் இருக்கிறார்கள் என பலரையும் ஆச்சர்யத்துடனும் பொறாமையுடனும் பார்க்க வைத்திருக்கிறது ரஜினி - கமல் நட்பு. சமீபத்தில் நடந்த கமல் 60 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேவைப்பட்டால் அரசியலிலும் இணைந்து பயணிப்போம் என்று சொல்லும் மனசு இருக்கே அது யாருக்கு வரும்.

  மதிப்பு

  சக நடிகர்கள் என்றாலும், சாதாரண டீ பாய் என்றாலும், சூப்பர்ஸ்டார் ரஜினி, அவர்களையும் மதித்து அன்பு செலுத்தும் விதத்தை அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பணி புரிந்த அத்தனை நடிகர்களும் பாராட்டி உள்ளனர். பாராட்டுதலுக்காக அவர் செய்யவில்லை. மனிதனை மனிதனாக பார்க்கும் நல்ல குணம் ரஜினிகாந்துக்கு இயற்கையாகவே உள்ளது.

  பாக்ஸ் ஆஃபிஸ் கிங்

  கிட்டத்தட்ட 44 வருடங்கள் சினிமாவில் முடி சூடா மன்னனாக ஆட்சி செய்து வருகிறார் ரஜினிகாந்த். இதுவரை ரஜினிகாந்த் நடிப்பில் 166 படங்கள் வெளியாகியுள்ளன. தர்பார் மற்றும் தலைவர் 168 படம் அடுத்தடுத்து லைனில் இருக்கின்றன. எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு தனது சூப்பர் ஹிட் படங்களின் மூலம் வெற்றிகளை குவித்து இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக இன்னிக்கும் ராஜா நான் கேட்டுப்பாருடா என பாடும் அளவுக்கு பல வசூல் சாதனைகளை போகிற போக்கில் சும்மா கிழித்துள்ளார்.

  ஹேப்பி பர்த்டே ரஜினிகாந்த்

  சினிமா, அரசியல், பிசினஸ், விளையாட்டு, ஆன்மிகம் என பல துறைகளில் ரஜினிகாந்துக்கு நட்பு வட்டம் இருக்கிறது. அரசியல் ரீதியாக ரஜினிகாந்த் வெளியிட்ட சில கருத்துக்கள் சில நேரங்களில் சர்ச்சையை கிளப்பினாலும், சினிமா நடிகராக ரஜினிகாந்தை பிடிக்காதே ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 70வது வயதில் அடியெடுத்து வைக்கும், சூப்பர்ஸ்டார் இதே எனர்ஜியோடு இன்னும் பல ஆண்டுகள் தமிழக மக்களை மகிழ்விக்க வேண்டும்.. ஹேப்பி பர்த்டே ரஜினிகாந்த்!

  English summary
  Super Star Rajinikanth 70th birthday celebration trending in all over India. Several hashtags are made for Rajinikanth birthday and several million peoples wishing the style samrat.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X