நான் ஒரு தடவை சொன்னா...100 தடவை சொன்ன மாதிரி… மாஸ் காட்டிய பாட்ஷா !

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் கிட்டதட்ட 170 க்கும் அதிகமான படங்களில் ரஜினி நடித்துள்ளார்.

எத்தனை ஸ்டார்களின் படங்கள் வந்தாலும் ரஜினியின் படங்களுக்கு இருக்கும் மவுசு இன்று வரை குறையவில்லை. அப்படி ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மாஸ் திரைப்படமாக அமைந்தது பாட்ஷா... இப்படம் குறித்து சில சுவாரசியத்தை பார்க்கலாம்....

அதிரிபுதிரி ஹிட்

அதிரிபுதிரி ஹிட்

ஹிந்தியில் வெளியான, ஹம் படத்தின் ரீமேக் தான், பாட்ஷா. ஆனால், ரஜினியின் அட்டகாசமான ஸ்டைல் மற்றும் சுரேஷ் கிருஷ்ணாவின் பரபரப்பான திரைக்கதை இயக்கத்தால், படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இப்படத்தை, ஒரு முறை பார்த்தவர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

வசூலில் சாதனை

வசூலில் சாதனை

ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் பாட்ஷா. தமிழ் திரைப்படங்களில் வசூலில் சாதனை படைத்தது.

மாஸ் காட்டிய வில்லன்

மாஸ் காட்டிய வில்லன்

மாஸான கதை, ரஜினி, ரகுவரனின் பிரம்மாண்டமான நடிப்பு, பாட்ஷா திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு வித்திட்டது. ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கமாகவும், மும்பை தாதா, பாட்ஷாவாகவும், இரு முகம் காட்டியிருந்தார் ரஜினி. அவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும், படம் படுதோல்வியை சந்தித்திருக்கும். ரஜினியின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு பெயர் பெற்றதோ அதே அளவிற்கு வில்லனாக நடித்த வில்லனாக நடித்த ரகுவரனின் ஆண்டனி கதாபாத்திரமும் வலிமையாக படைக்கப்பட்டிருக்கும். தன் வசீகர குரலால், மிரட்டியிருந்தார், ரகுவரன்.

அனல் பறக்கும் வசனம்

அனல் பறக்கும் வசனம்

எனக்கு இன்னொரு பேரு இருக்கு, நான் ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்ன மாதிரி என, பாலகுமாரனின் வசனங்கள், பாட்ஷா திரைப்படத்தின் மாஸான வசனங்கள் இன்று வரை தெறிக்கவிட்டு வருகின்றன.

Recommended Video

Rajinikanth வைத்து படம் பண்ண ஆசை | Director Rajamouli பேட்டி
ஆட்டோக்காரன்

ஆட்டோக்காரன்

தேனிசை தென்றல் தேவாவின் தேவா இசையில், வைரமுத்து எழுதிய, அனைத்து பாடல்களும், பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. எட்டு எட்டாய் மனுஷன் வாழ்க்கை பாடலை ரஜினிகாந்திற்காக வைரமுத்து எழுதினார். ஆயுதபூஜை என்றால், இப்போதும் ஆட்டோ ஸ்டான்டுகளில், நான் ஆட்டோக்காரன்... பாடல் தான் முதல் பாடலாக ஒலிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X