ரஜினிக்கு என் கதை ரொம்பவே பிடித்திருந்தது... இயக்குநர் நெல்சன்!
சென்னை: கோலமாவு கோகிலா மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன்
சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் என்ற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்த பிறகு விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் இணைந்தார்
இந்நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து புதிய படத்தை இயக்க உள்ள நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் என் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்தது என தெரிவித்துள்ளார்.

கடத்தல் கதையில் காமெடி கலந்து
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இப்போது பல கதைகளில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த திரைப்படம் கோலமாவு கோகிலா. மிகவும் வித்தியாசமான கடத்தல் கதையில் காமெடி கலந்து கூறியிருந்த கோலமாவு கோகிலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
நயன்தாராவுடன் இணைந்து யோகிபாபு இந்த படத்தில் லீட் ரோலில் நடித்து அசத்தியிருப்பார். முதல் படத்திலேயே சிக்சர் அடித்த நெல்சன் சினிமா ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டார்

டாக்டர்
இந்த நிலையில் அடுத்ததாக தனது நீண்டகால நண்பரான சிவகார்த்திகேயனிடம் கூட்டணி அமைத்த நெல்சன் டாக்டர் என்ற படத்தை இயக்கினார் பொதுவாக தன்னுடைய படங்களில் கடத்தலை மையமாக வைத்து இயக்கும் இவர் இந்த படத்திலும் பெண் குழந்தைகள் கடத்தும் கும்பலை குறித்து இயக்கியிருந்தார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் டார்க் காமெடியை அனைவரும் ரசிக்கும் வகையில் டாக்டர் படத்திலும் கூறியிருந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது

பிளாக்பஸ்டர் வெற்றி
மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் வழக்கமான கதாபாத்திரங்கள் போல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான ரோலில் அதிகமாகப் பேசாமல் நடித்திருந்தது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தாமதமாக டாக்டர் வெளியானாலும் பட்டையை கிளப்பி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது

ரஜினிக்கு என் கதை ரொம்பவே பிடித்திருந்தது
இந்த நிலையில் விஜய்யுடன் கூட்டணி அமைத்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் நெல்சன் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ள நிலையில் தனியார் யூடியூப் சேனலில் பேசிய நெல்சன் டாக்டர் படம் லாக்டவுன் காரணமாக தாமதமாக சமயத்தில்தான் பீஸ்ட் கதையை முடித்தேன் . இந்நிலையில் திடீரென தோன்றிய ஒரு கதையைத்தான் ரஜினி சாருக்கு சொன்னேன். அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து போனது என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











