அமிதாப் பிறந்த நாள் விழா... அசத்திய சூப்பர் ஸ்டார்!
அமிதாப் பச்சனின் 70 வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி, தனது திரையுலக, அரசியல், சமூகம் சார்ந்த பல்வேறு நண்பர்கள், விவிஐபிகளுக்கு பெரிய விருந்தளித்தார் பிக் பி என செல்லமாக அழைக்கப்படும் அமிதாப்.

விருந்தினராக வந்து விழா நாயகனாகனார்...
இந்த விழாவின் முக்கிய விருந்தினர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிதான். ஷார்ப்பாக 8.30 மணிக்கு கறுப்பு ப்ளேசரில் படுகலக்கலாக வந்திருந்தார். அவரது விருப்ப உடை வொயிட் அண்ட் வொயிட் என்றாலும், இந்த நிகழ்ச்சிக்காக கறுப்பு பிளேசருக்கு மாறியிருந்தார். உடன் சிவப்பு பட்டுப் புடவையில் லதா ரஜினி.

மீடியாவின் மொத்த கவனமும்...
விழாவில் மீடியாவின் மொத்த கவனமும் ரஜினி மீதுதான். கையெடுத்து கும்பிட்டபடி, படு ஸ்டைலாக நடந்த ரஜினியை அப்படியே விழுங்கின காமிராக்கள். அவரை ஒரு வரியாவது பேச வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் மீடியாக்காரர்கள். ரஜினியும் அவர்களை ஏமாற்றவில்லை!

அமிதாப்புக்கு ஸ்பெஷல் வாழ்த்து...
ஆயிரம் பேரை இந்த நிகழ்ச்சிக்கு அமிதாப் அழைத்திருந்தாலும், அவர் மிக முக்கியமாகக் கருதியது ரஜினியைத்தான் என்பது, அவர் ரஜினி -லதாவை உபசரித்து நீண்ட நேரம் பேசியதிலிருந்தே தெரிந்தது.

பிரபுவும் வந்தார்
நடிகர் திலகம் சிவாஜியின் படு தீவிர ரசிகர் அமிதாப். இப்போது சிவாஜி மகன் பிரபு அமிதாப்பின் ரசிகர். சமீபத்தில் இருவரும் இணைந்து ஒரு விளம்பரப் படம் செய்தது நினைவிருக்கலாம். அமிதாப் விழாவில் பிரபு வந்திருந்ததில் ஆச்சர்யமில்லையே!

பாலிவுட் திரண்டது...
நிகழ்ச்சி நடந்த இடம் குரேகான் அருகில் உள்ள ரிலையன்ஸ் பிலிம்சிட்டி. ஷாரூக்கான், அவர் மனைவி கவுரி, ரிஷி கபூர், சசிகபூர், ஹேமமாலினி, சாய்ரா பானு, வஹீதா ரஹ்மான், வினோத் கன்னா, பிரேம் சோப்ரா, ஸ்ரீதேவி, சஞ்சய் தத், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப், அஷுதேஷ் கோவாரிகள், ஜூஹி சாவ்லா, ஜீனத் அமன், ஆஷா பரேக்... என பாலிவுட் பிரபலங்கள் திரண்டுவிட்டனர்.
அமிதாப் பிறந்த நாள் விழா படங்கள்


Click it and Unblock the Notifications











