அடேங்கப்பா.. அண்ணாத்த பட்ஜெட் இத்தனை கோடியா? வீரம் படத்தில் நடித்த நடிகர் ரஜினிக்கு வில்லனா?

சென்னை: அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், அந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக வீரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி உள்ள இந்த படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

தீபாவளி ரிலீஸ் கன்ஃபார்மா

தீபாவளி ரிலீஸ் கன்ஃபார்மா

சன் பிக்சர்ஸ் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில், அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் கிறிஸ்துமஸ்க்கு தள்ளிப் போகலாம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. ஆனால், சன் பிக்சர்ஸ் இதுவரை அது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், அண்ணாத்த நிச்சயம் தீபாவளி ரிலீஸ் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டீசர் எப்போ

டீசர் எப்போ

பொங்கலுக்கு வெளியாக உள்ள வலிமை படத்தின் க்ளிம்ஸே வெளியான நிலையில், அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டரை தவிர வேறு எந்தவொரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. வரும் ஆயுத பூஜைக்காவது அண்ணாத்த டீசர் வெளியாகவில்லை என்றால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் வாய்ப்பு உருவாகும் என்றும் கருதப்படுகிறது.

எஸ்.பி.பி நினைவு தினத்தில்

எஸ்.பி.பி நினைவு தினத்தில்

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் போது அண்ணாத்த படத்தில் அவர் பாடியுள்ள இன்ட்ரோ பாடலை இசையமைப்பாளர் இமான் வெளியிடுவார் என எஸ்.பி.பி ரசிகர்களும் ரஜினிகாந்த் ரசிகர்களும் காத்திருந்து ஏமாந்து போனார்கள்.

240 கோடி பட்ஜெட்

240 கோடி பட்ஜெட்

இந்நிலையில், ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் 240 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக தற்போது ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் மட்டுமே இதில் 100 முதல் 120 கோடி இருக்கும் என்றும் மற்ற நடிகர்களின் சம்பளம் தான் படத்தின் பட்ஜெட் இந்த அளவுக்கு அதிகரிக்க காரணம் என்றும் கூறுகின்றனர்.

நயன்தாரா சம்பளம்

நயன்தாரா சம்பளம்

தர்பார் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த் உடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் படத்திற்கு பிறகு மீண்டும் அவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3 கோடி ரூபாய்

3 கோடி ரூபாய்

நயன்தாராவை தொடர்ந்து இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரின் மொத்த சம்பளமே 3 கோடி ரூபாய் என்றும் கீர்த்தி சுரேஷ் மட்டும் இதில் 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இமான் சம்பளம்

இமான் சம்பளம்

விஸ்வாசம் படத்தில் "கண்ணான கண்ணே" பாடலை இசையமைத்து தேசிய விருதையே தட்டிச் சென்ற இசையமைப்பாளர் இமான் அண்ணாத்த படத்திலும் இசையமைத்துள்ளார். விஸ்வாசம் படத்திற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில், இந்த படத்தில் இமானின் சம்பளம் 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாம்.

சிறுத்தை சிவா தம்பி

சிறுத்தை சிவா தம்பி

2003ம் ஆண்டு வெளியான அன்பு படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான நடிகர் பாலா தான் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி. வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா அண்ணாத்த படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளதாக சமீபத்தில் மலையாள மீடியா ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பட்ஜெட் பெரிது என்பதால், அண்ணாத்த படத்தின் வசூலும் பெருசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X