துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
ரஜினியின் ராணா படத்தின் நாயகியாக இதுவரை தீபிகா படுகோன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது மேலும் இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடையாள அட்டை தரப்பட்ட படத்தின் டெக்னீஷியன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இப்போதைக்கு தீபிகா பெயரை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.
படத்தில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். இதில் இளம் ரஜினிக்கு ஜோடிதான் தீபிகா. இன்னொரு ரஜினிக்கு இலியானாவும், வயதான ரஜினிக்கு தபுவும் ஜோடியாக நடிக்கின்றனர்.
இவர்கள் தவிர, ரஜினியின் தங்கை உள்ளிட்ட வேடங்களில் மூன்று முக்கிய நாயகிகள் நடிக்க உள்ளனர்.
"இந்தப் படம் ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும். ரஜினி சார் சொன்ன கதை அத்தனை பவர்புல்லானது. அதற்கு மிக அழகான, அதிரடியான திரைக்கதை வடிவம் தந்துள்ளோம். ஹீரோவுக்கு இணையான வேடம் நாயகிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் பங்கேற்கும் அத்தனை பேரும் நினைத்து நினைத்து பெருமைப்படும் அளவுக்கு இந்தப் படம் அமையும்', என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
ராணா பட சூட்டிங் - படங்கள்


Click it and Unblock the Notifications











